ADDED : மே 16, 2026 03:36 AM
அ நிறம் | அளவு
பெங்களூரு: 'மெட்ரோ ரயில் ஊதா நிற வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளதால், நாளை இரண்டு மணி நேரம் ரயில்கள் இயங்காது' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சல்லக்கட்டா முதல் ஒயிட் பீல்டு வரையிலான பெங்களூரு மெட்ரோ ஊதா நிற வழித்தடத்தில், நாளை பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன.
இதனால், மெஜஸ்டிக் - மைசூரு மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே, காலை 7:00 மணி முதல் காலை 9:00 மணி வரை ரயில்கள் இயங்காது.
இரண்டு மணி நேரம் ரயில்கள் இயங்காததால், பயணியர் மாற்று வழியை ஏற்பாடு செய்து கொள்ளவும். சிரமத்திற்கு மன்னிக்கவும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
பயணியரின் பாதுகாப்பை உறுதி செய்தவற்கு பராமரிப்பு பணிகள் அவசியம். அதே சமயம், மற்ற வழித்தடங்களில் ரயில் சேவையில் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
