ADDED : ஆக 28, 2026 11:26 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: பராமரிப்பு பணிகளின் காரணமாக பென்னிகனஹள்ளி - பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே செல்லும் ரயிலின் வேகம் கு றைக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு மெட்ரோ ரயில் ஊதா வழித்தடத்தில் பெ ன்னிகனஹள்ளி - பையப்பனஹள்ளி மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடக் கின்றன.
வழக்கமாக மணிக்கு, 65 கி.மீ., வேகத்தில் இயங்கும் ரயில்கள், தற்போது, 40 கி.மீ., வேகத்தில் மட்டும் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பு கருதி ரயிலின் வேகம் குறைக்கப்பட்டு உள்ளது.
அதே சமயம், ஊதா வழித்தடத்தில் ரயில் சேவைகள் வழக்கம் போல இயங்கும். ரயில் பயண நேரத்தில் சிறு மாறுதல்கள் ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
