/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஞ்சள் வழித்தடத்தில் காலை 5 மணிக்கு மெட்ரோ ரயில்
/
மஞ்சள் வழித்தடத்தில் காலை 5 மணிக்கு மெட்ரோ ரயில்
மஞ்சள் வழித்தடத்தில் காலை 5 மணிக்கு மெட்ரோ ரயில்
மஞ்சள் வழித்தடத்தில் காலை 5 மணிக்கு மெட்ரோ ரயில்
ADDED : நவ 27, 2025 07:31 AM
பெங்களூரு: பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவைகள் காலை 6:00 மணி முதல் துவங்குகின்றன.'மற்ற வழித்தடங்களை போல, மஞ்சள் வழித்தடத்திலும் அதிகாலை 5:00 மணிக்கு ரயில் சேவை துவங்க வேண்டும்' என கூறி சில நாட்களுக்கு முன்பு பயணியர் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில், மஞ்சள் வழித்தடத்தில் ஒவ்வொரு வாரத்திலும் திங்கட்கிழமைகளில் மட்டும் ரயில் சேவை அதிகாலை 5:05 மணிக்கு துவங்கப்படும். மற்ற நாட்களில் வழக்கம் போல காலை 6:00 மணிக்கு துவங்கப்படும் என, மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வார இறுதி நாட்களில் தங்கள் ஊருக்கு சென்று, மீண்டும் திங்கட்கிழமைகளில் மக்கள் பெங்களூரு திரும்புகின்றனர். இதனால், திங்கட்கிழமைகளில் பயணியர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே, திங்கட்கிழமைகளில் மட்டும் ரயில் சேவை முன்னதாக தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

