/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயக்கம்
/
மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இயக்கம்
ADDED : மே 13, 2025 01:08 AM
பெங்களூரு: பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில், பிரீமியர் லீக் போட்டிகள் நடக்கும் நாட்களில் ரசிகர்கள் பயணம் செய்வதற்கு ஏதுவாக மெட்ரோ ரயில்கள் இயங்கும் நேரம் நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வகையில், இன்றும், 17ம் தேதியும் அதிகாலை 1:30 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், எல்லையில் நிலவும் பதற்றம் காரணமாக ஐ.பி.எல்., போட்டிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டன.
இதனால், சின்னசாமி மைதானத்தில் நடக்க இருந்த போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. போட்டிகள் நடக்காததால், மெட்ரோ ரயில்கள் வழக்கம் போல இரவு 11:30 மணி வரை மட்டுமே இயங்கும் என பெங்களூரு மெட்ரோ நிர்வாகம் நேற்று அறிவித்து உள்ளது.