/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மெட்ரோ மஞ்சள் வழித்தடம் எட்டாவது ரயில் வருகை
/
மெட்ரோ மஞ்சள் வழித்தடம் எட்டாவது ரயில் வருகை
ADDED : ஜன 20, 2026 06:27 AM
பெங்களூரு: மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தின் பயன்பாட்டுக்காக, ஓட்டுநர் இல்லாத ரயில், ஹெப்பகோடி பணிமனைக்கு வந்து சேர்ந்தது.
பெங்களூரு ஆர்.வி., ரோடு முதல் பொம்மசந்திரா வரையிலான மெட்ரோ ரயில் மஞ்சள் வழித்தடத்தில் ரயில் சேவை, கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் துவக்கப்பட்டது. இந்த ரயில், தமிழகத்தில் இருந்து பெங்களூரு வருவோருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது. துவக்கத்தில் மூன்று ரயில்கள் பயன்பாட்டில் இருந்தன. பின், படிப்படியாக ஏழு ரயில்கள் இயக்கப்படுகின்றன. 10 முதல் 12 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயங்குகின்றன.
இந்நிலையில், ஓட்டுநர் இல்லாத 8வது மெட்ரோ ரயில், கொல்கட்டாவில் இருந்து பெங்களூரு ஹெப்பகோடி பணிமனைக்கு நேற்று வந்தது. இந்த ரயிலின் சோதனை ஓட்டம் முடிந்த பின், பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதன்பின், ரயில்கள் இயக்கப்படும் இடைவெளி 8 முதல் 10 நிமிடங்களாக குறைக்கப்படும். இதன் மூலம் பயணியருக்கு உதவியாக இருக்கும்.

