/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்வார்: போசராஜு நம்பிக்கை
/
சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்வார்: போசராஜு நம்பிக்கை
சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்வார்: போசராஜு நம்பிக்கை
சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்வார்: போசராஜு நம்பிக்கை
ADDED : ஜன 20, 2026 06:28 AM

பெங்களூரு: ''முதல்வர் சித்தராமையா இம்முறை பட்ஜெட் தாக்கல் செய்வார். இது நுாற்றுக்கு நுாறு சதவீதம் உறுதி,'' என சிறிய நீர்ப்பாசனத்துறை அமைச்சர் போசராஜு தெரிவித்தார்.
பெங்களூரு விகாஸ் சவுதாவில், நேற்று அவர் அளித்த பேட்டி:
முதல்வர் மாற்றம் விஷயம், முடிநது போன அத்தியாயம் என, நான் கூறவில்லை. முதல்வர் மாற்றத்தில் கட்சி மேலிடத்தின் முடிவே இறுதியானது.
இதை முதல்வரும், துணை முதல்வரும் ஏற்கனவே தெளிவுப்படுத்தியுள்ளனர். தற்போதைக்கு முதல்வரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. ஒருவேளை ஏற்பட்டால், மேலிடம் சரியான முடிவை எடுக்கும்.
பா.ஜ.,வினர் காலை முதல் மாலை வரை, கூப்பாடு போடுகின்றனர். அரசு தவறு செய்தால், அதை சுட்டிக்காட்டட்டும். ஆனால் தேவையின்றி பொய் சொல்லக்கூடாது.
முதல்வர் சித்தராமையா. இம்முறையும் பட்ஜெட் தாக்கல் செய்வார். இது நுாற்றுக்கு நுாறு சதவீதம் உறுதி. அனைத்து பணிகளும் சரியாக நடக்கின்றன. வாக்குறுதி திட்டங்களை அளித்துள்ளோம். எங்கள் கட்சியில் பதவிக்காக எந்த குழப்பமும் ஏற்படவில்லை. எங்களின் அமைச்சர் பதவி நிரந்தரம் என, நான் கூறவில்லை. அமைச்சரவை மாற்றம் குறித்தும், மேலிடமே தீர்மானிக்கும்.
பா.ஜ.,வின் ஸ்ரீராமுலு அமைச்சராக பதவி வகித்தவர். எந்த விஷயத்தை பற்றி பேசலாம், பேசக்கூடாது என்பதை அறிந்திருக்க வேண்டும்.
அதை மறந்து பேசினால், சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தின் நிலை என்ன ஆவது. ஸ்ரீராமுலு மீது போலீசார் சட்டப்படியே வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கலால் துறையில் எந்த ஊழலும் நடக்கவில்லை. அமைச்சர் திம்மாபூர் மீது, பா.ஜ.,வினர் பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி, மக்களை திசை திருப்புகின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

