/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சோழர் காலத்து சிவன் கோவிலில் நீரிழிவை குணமாக்கும் பாலாபிஷேகம்
/
சோழர் காலத்து சிவன் கோவிலில் நீரிழிவை குணமாக்கும் பாலாபிஷேகம்
சோழர் காலத்து சிவன் கோவிலில் நீரிழிவை குணமாக்கும் பாலாபிஷேகம்
சோழர் காலத்து சிவன் கோவிலில் நீரிழிவை குணமாக்கும் பாலாபிஷேகம்
ADDED : ஜூன் 02, 2025 10:20 PM

பெங்களூரில் இருந்து 35 கி.மீ., துாரத்தில் கனகபுரா செல்லும் சாலையில் உள்ளது ஹரோஹள்ளி. இங்கு தான் பழமையான, சக்தி வாய்ந்த சிவன் கோவில்களில் ஒன்றான ஸ்ரீ அருணாச்சலேஸ்வரா கோவில் உள்ளது.
இந்த கோவில் 600 ஆண்டுகளுக்கு முன் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. தற்போது, உள்ளூர்வாசிகள், தொட்ட குடி எனும் பெரிய கோவில் என அழைக்கின்றனர். இங்கு மூலவராக சிவபெருமானின் அருட்பெயரான அருணாச்சலேஸ்வரா என பக்தர்கள் அழைக்கின்றார். இதே போன்று, தேவி ஸ்ரீ பிரசன்ன பார்வதி அம்மா என காட்சி அளிக்கிறார்.
கோவிலில் உள்ள ஒவ்வொரு துாண்களிலும் பல சிலைகள் செதுக்கப்பட்டு உள்ளன. இவை, அனைத்தும் பழமையை பறை சாற்றுகின்றன.
தனி சன்னிதிகள்
கணபதி, சாரதா தேவி, மஹாலட்சுமி, வெங்கடேஸ்வரா, பத்மாவதி தாயார், மஹா விஷ்ணு, தனலட்சுமி, ஆனந்த பத்மநாபர், பனசங்கரி அம்மன், வீரபத்ரசுவாமி, காளிகாம்பாள், கங்காதேஸ்வரர், அய்யப்ப சுவாமி, உமா மகேஸ்வரர், கவுரி சங்கரர், ஆதிசக்தி, காலபைரேஸ்வரர்.
அன்னபூர்னேஸ்வரி, ஆஞ்சநேயர், சீதா தேவி லட்சுமணருடன் ராமர் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். இங்கு பெரிய அளவிலான ஒரு சிவன் சிலையும் உள்ளது. இதை பார்க்கும் போது பரவசம் ஏற்படுவது உறுதி.
நீரிழிவு குணமாகும்
இங்கு வரும் பக்தர்கள் செல்வம், நோயில்லா வாழ்வு, வாகனம் வாங்குதல், சொந்த வீடு கட்டுதல் என வேண்டுவது வழக்கம். அருணாச்சலேஸ்வரருக்கு பாலாபிஷேகம் செய்வதற்கு காணிக்கையாக பால் கொடுப்பதால், பக்தர்களின் நீரிழிவு குறையும் என்பது நம்பிக்கை.
லிங்கம் மற்ற கோவில்களில் உள்ளது போல் இல்லாமல், சாளக்கிராம கற்களால் செய்யப்பட்டு உள்ளது. ஒவ்வொரு மாதமும் கடைசி திங்கட் கிழமைகளில் நடக்கும் கடலைக்காய் விழாவில், பக்தர்கள் அதிகளவு கலந்து கொள்கின்றனர். மஹா சிவராத்திரி அன்று பெங்களூரு, மைசூரு, மங்களூரு, கனகபுரா, ஹாரோஹள்ளி என பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வருவர். அப்போது, பக்தர்கள் தேவையான வசதிகளை கோவில் நிர்வாகம் செய்து உள்ளது.
தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 12:30 மணி வரையும்; மாலை 4:30 மணி முதல் இரவு 8:00 மணி வரை கோவில் நடை திறந்திருக்கும். சிறப்பு நாட்களில் பூஜை நேரம் மாறுபடும்
-நமது நிருபர் -.