sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சுற்றுச்சூழலை பாதுக்காக்க அதிரடி மக்காச்சோளத்தில் பால் பாக்கெட்டுகள்

சுற்றுச்சூழலை பாதுக்காக்க அதிரடி மக்காச்சோளத்தில் பால் பாக்கெட்டுகள்

சுற்றுச்சூழலை பாதுக்காக்க அதிரடி மக்காச்சோளத்தில் பால் பாக்கெட்டுகள்


ADDED : ஜூன் 21, 2025 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 11:12 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மக்காச்சோளத்தை பயன்படுத்தி பால் பாக்கெட்டுகள் தயாரிக்க 'பாமுல்' திட்டமிட்டு உள்ளது.

'பாமுல்' எனும் பெங்களூரு பால் கூட்டமைப்பு சங்கம், ஒரு நாளைக்கு 14 லட்சம் லிட்டர் பால் மற்றும் தயிர் விற்பனை செய்கிறது. இதற்காக, 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பாலித்தீன் பாக்கெட்டுகளை தயாரிக்கிறது. இந்த பாக்கெட்டுகள், சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்க கூடியவை. இதை கருத்தில் கொண்ட பாமுல், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முயற்சிகள் எடுத்து வருகிறது.

இவ்வகையில், புதிய திட்டம் ஒன்றில் இறங்கி உள்ளது. இதன்படி, பாலித்தீன் பால் பாக்கெட்டுகளுக்கு பதிலாக, மக்காச்சோளத்தால் தயாரிக்கப்பட்ட பால் பாக்கெட்டுகளை தயாரிக்க உள்ளது. இந்த வகை, பாக்கெட்டுகள் மண்ணில் போட்டவுடன், ஆறு மாதங்களுக்குள் மக்கிவிடும். இதற்கான சோதனை, கனகபுராவில் உள்ள சிவனஹள்ளியில் நடக்க உள்ளது.

இது போன்ற மக்கும் பாக்கெட்டுகள், வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ளன.

முதல் முறையாக இந்தியாவில் நடைமுறைக்கு வர உள்ளது. இத்திட்டம் வெற்றி பெற்றால், சுற்றுச்சூழலுக்கு உகந்த பால் பாக்கெட்டுகள் வாடிக்கையாளர்களின் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யப்படும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us