/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் நாளை மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள் துவக்கம்
/
பெங்களூரில் நாளை மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள் துவக்கம்
பெங்களூரில் நாளை மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள் துவக்கம்
பெங்களூரில் நாளை மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள் துவக்கம்
ADDED : நவ 01, 2025 04:27 AM

பெங்களூரு: கர்நாடகா முழுதும் உள்ள 5,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் '4வது மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள்' பெங்களூரு நாளை கோலாகலமாக துவங்குகிறது.
கர்நாடகா ஒலிம்பிக் அசோசியேஷன், கர்நாடகா விளையாட்டு ஆணையம், இளைஞர் மேம்பாட்டு, விளையாட்டு துறை ஆகியவை இணைந்து நடத்தும் '4வது மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள்' நாளை மாலை 5:00 மணிக்கு பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் ஆகியோர் துவக்கி வைக்கின்றனர். வரும் 9ம் தேதி வரை நடக்கிறது. இம்முறை குத்துச்சண்டை, ஹாக்கி, கபடி, கால்பந்து உள்ளிட்ட 27 விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 14 வயதுக்கு உட்பட்ட 5,000க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
பெரும்பாலான போட்டிகள், கன்டீரவா மைதானத்தில் நடக்கும். ஹலசூரு ஏரிக்கரை, நைஸ் ரோடு, பெங்களூரு கோல்ப் மைதானம், ஒயிட் பீல்டு கோபாலன் விளையாட்டு மையம், வித்யா நகர் ஸ்போர்ட்ஸ் காம்பிளக்ஸ், கே.எம்.கரியப்பா ஹாக்கி மைதானம், எம்பசி சர்வதேச குதிரை பயிற்சி பள்ளி, பெங்களூரு சாய் சவுத் சென்டர், ஹலசூரு நீச்சல் குளம், கர்நாடகா மாநில கால்பந்து விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடக்கும். கர்நாடகா ஒலிம்பிக் அசோசியேஷன் தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான கோவிந்தராஜ் கூறியதாவது:
இந்த விளையாட்டு போட்டிகள் இளம் வீரர், வீராங்கனைக்கு பெரிய வாய்ப்பாக இருக்கும். இவர்கள், பதக்கங்களை வென்று நாட்டுக்கு பெருமை சேர்ப்பர். கிரிக்கெட்டை தவிர மற்ற விளையாட்டுகளையும் முன்னிலைப்படுத்தும் விதமாக மினி கர்நாடகா விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
போட்டிகளில் பங்கேற்கும் வீரர்களுக்கு தங்கும் இடவசதி, இலவச உணவு, நிதி ஆகியவை வழங்கப்படும். இப்போட்டிகளில் நகரில் இருப்பவர்களை விட கிராம பகுதிகளில் இருந்து வருபவர்களே அதிகம் வெற்றி பெறுகின்றனர். சீனியர் விளையாட்டு போட்டிகள் துமகூரில் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

