/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பழங்கால பொருட்களால் 'வீட்டில் மினி அருங்காட்சியகம்'
/
பழங்கால பொருட்களால் 'வீட்டில் மினி அருங்காட்சியகம்'
பழங்கால பொருட்களால் 'வீட்டில் மினி அருங்காட்சியகம்'
பழங்கால பொருட்களால் 'வீட்டில் மினி அருங்காட்சியகம்'
ADDED : மே 10, 2025 11:38 PM

தட்சிண கன்னடா, மங்களூரு மன்னார்குடா பகுதியை சேர்ந்தவர் ரகுநாத் பிரபு, 62. இவர் ஒரு ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி. இவர் சிறுவயதில் இருந்து தபால் தலைகள், நாணயங்களை சேகரிப்பதை செய்து வந்தார். இவரது தந்தையிடமிருந்து கற்று கொண்டு உள்ளார்.
சிறுவயதில் விளையாட்டாய் துவங்கியவர், காலப்போக்கில் பழங்காலத்து பொருட்களை சேகரிப்பதை தீவிரமாக எடுத்து கொண்டார்.
சேகரிப்பு
ஆரம்பத்தில் தபால் தலைகள், நாணயங்களை சேகரிக்க துவங்கியவர், தனது பள்ளி, கல்லுாரி படிப்பின் போது பல ஆண்டுகளுக்கு முன் இரும்பு, களிமண், வெண்கலம், பித்தளை போன்றவையால் செய்யப்பட்ட பொருட்களை சேகரிக்க துவங்கினார்.
இவரது சேகரிப்பில் பழைய செய்தித்தாள்களையும் சேகரிக்க தவறவில்லை. இதற்காக பல நுாறு ரூபாய்களை செலவழித்து உள்ளார். சேகரித்த பொருட்களை தன் வீட்டிலேயே பத்திரப்படுத்தினார்.
இதை பார்த்த, அக்கம் பக்கத்தினர் அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர். அவர்களும், தங்கள் பங்கிற்கு பழைய பொருட்களை ரகுநாத்திடம் ஒப்படைத்தார். இதை பார்த்த ரகுநாத் உத்வேகமாக எடுத்து கொண்டு, இன்னும் தீவிரமாக பழைய பொருட்களை சேகரித்தார்.
அப்போது, பழைய மாடல் டெலிபோன்கள், அரிசி சேமிக்கும் மண்பாண்டங்கள், சிறிய அளவிலான பானைகள், கிணற்றில் உபயோகப்படுத்தும் சக்கரங்கள் ஆகியவற்றே பல ஊர்களுக்கு சென்று தேடி தேடி சேகரிக்க துவங்கினார்.
ஓய்வுக்கு பின்னரும்
தினமும் வங்கி வேலைக்கு சென்று வந்த பின், பழங்காலத்து பொருட்களை சேகரிப்பதிலேயே நேரத்தை செலவிட்டு வந்தார். ஒரு சமயத்தில் முழு நேர பணியாகவே மாறிவிட்டது. இந்த பொருட்களை சேகரிக்கும் வேலையை சிறு வயதில் ஆரம்பித்தவர், வங்கி வேலையில் இருந்து ஓய்வு பெற்ற பின்னரும், இப்பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
தற்போது, இவரது வீடே பழைய பொருட்களால் நிறைந்து ஒரு மினி அருங்காட்சியகம் போல காட்சி அளிக்கிறது.
- நமது நிருபர்-