/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலம் பெயர்பவர்களால் குற்றங்கள் தடுக்க அமைச்சர் ஆலோசனை
/
புலம் பெயர்பவர்களால் குற்றங்கள் தடுக்க அமைச்சர் ஆலோசனை
புலம் பெயர்பவர்களால் குற்றங்கள் தடுக்க அமைச்சர் ஆலோசனை
புலம் பெயர்பவர்களால் குற்றங்கள் தடுக்க அமைச்சர் ஆலோசனை
ADDED : ஏப் 15, 2025 06:55 AM

பெங்களூரு: ''புலம் பெயர்ந்த தொழிலாளர்களால் ஏற்படும் குற்றச்சம்பவங்களை தடுப்பது குறித்து தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சந்தோஷ் லாட்டுடன் ஆலோசனை நடத்தப்படும்,'' என உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் கூறினார்.
பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஹூப்பள்ளியில் பீஹாரை சேர்ந்த கூலித்தொழிலாளி, 5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது ஒரு கொடூரமான சம்பவம். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க ஒரு மூத்த அதிகாரி நியமிக்கப்படுவார்.
பெங்களூரு வேகமாக வளர்ந்து வரும் நகரமாக உள்ளதால், பிற மாநிலத்தில் இருந்து வேலைக்கு வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இவர்களில் சிலர் குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து தொழிலாளர் நலன் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளேன்.
பிற மாநிலங்களில் இருந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கையை தடுக்க முடியாது. இவர்களால் ஏற்படும் குற்றங்களை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கலாம்.
இம்மாத துவக்கத்தில் பெங்களூரில் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் கேரளாவில் கைது செய்யப்பட்டடு உள்ளார். அவர் விரைவில் பெங்களூரு அழைத்து வரப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.