தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ஆஷா ஊழியர்கள் குறித்து சர்ச்சை கருத்து எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

ஆஷா ஊழியர்கள் குறித்து சர்ச்சை கருத்து எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்ட அமைச்சர்

ஆஷா ஊழியர்கள் குறித்து சர்ச்சை கருத்து எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்ட அமைச்சர்


UPDATED : நவ 26, 2026 12:06 AM

ADDED : நவ 26, 2026 12:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 26, 2026 12:06 AM ADDED : நவ 26, 2026 12:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ‘ஆஷா ஊழியர்கள் கேட்கும் போது எல்லாம் கழற்றி கொடுக்க, எங்களிடம் நெக்லஸ் இல்லை’ என்று, விவசாய துறை அமைச்சர் நரேந்திரசாமி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்தார். இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் மன்னிப்பு கேட்டார்.

மாத சம்பளமாக, 15,000 ரூபாய் வழங்க வேண்டும் என்பது உட்பட 13 அம்ச கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆஷா ஊழியர்கள், கடந்த 17ம் தேதி முதல், பெங்களூரு சுதந்திர பூங்காவில் பகல், இரவு போராட்டம் நடத்துகின்றனர்.

இவர்களிடம், முதல்வர் சிவகுமார், சுகாதார துறை அமைச்சர் காதர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. நேற்று முன்தினம் 8வது நாள் போராட்டத்தின் போது, மழையில் நனைந்தபடி தங்கள் போராட்டத்தை தொடர்ந்தனர்.

இரவில் சுதந்திர பூங்காவிலும், அதன் வழியாக செல்லும் சாலைகளிலும் துாங்கி வந்தனர்.

நேற்று முன்தினம் மாலை மழை பெய்ததால், சுதந்திர பூங்கா பகுதியில் கட்டப்பட்டுள்ள ஜி.பி.ஏ.,வின் வாகன பார்க்கிங் பகுதியில் துாங்கினர். நேற்று, 9வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர்.

இந்நிலையில், ஆஷா ஊழியர்கள் போராட்டம் குறித்து, விவசாய துறை அமைச்சர் நரேந்திரசாமி கூறுகையில், ‘ஆஷா ஊழியர்கள் கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராக உள்ளது. அவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும். அவர்கள் கேட்கும் போது எல்லாம் கழற்றி கொடுக்க, எங்களிடம் – அரசிடம் நெக்லஸ் இல்லை. இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

இரவு, பகல் பாராமல் கடும் குளிரில் போராட்டம் நடத்தும் ஆஷா ஊழியர்களை அவமதிக்கும் வகையில், நரேந்திரசாமி பேசியதாக கடும் கண்டனம் எழுந்தது. சுதாரித்து கொண்ட நரேந்திரசாமி தன் பேச்சுக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

இதற்கிடையில், போராட்டம் நடத்தும் ஆஷா ஊழியர்களை, இரண்டு நாட்களுக்கு முன் நடிகை காருண்யா ராம் சந்தித்து தனது ஆதரவை வழங்கினார்.

இந்நிலையில், காங்கிரஸ் முன்னாள் எம்.பி., ரம்யா, பா.ஜ., முன்னாள் எம்.எல்.சி., தாரா அனுராதா, கர்நாடக பா.ஜ., துணை தலைவர் மாளவிகா, அவரது கணவரும், நடிகருமான அவினாஷ் ஆகியோர், நேற்று ஆஷா ஊழியர்கள் போராட்டம் நடத்தும் இடத்திற்கு சென்று தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us