/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவசாய தசரா மைசூரில் துவக்கம் மாட்டு வண்டியில் வந்தார் அமைச்சர்
/
விவசாய தசரா மைசூரில் துவக்கம் மாட்டு வண்டியில் வந்தார் அமைச்சர்
விவசாய தசரா மைசூரில் துவக்கம் மாட்டு வண்டியில் வந்தார் அமைச்சர்
விவசாய தசரா மைசூரில் துவக்கம் மாட்டு வண்டியில் வந்தார் அமைச்சர்
ADDED : செப் 27, 2025 04:55 AM

மைசூரு தசராவில் விவசாயத்தின் பெருமையை வெளிப்படுத்தும் வகையில், மூன்று நாட்கள் நடக்கும் விவசாய தசரா நேற்று துவங்கியது.
மைசூரு ரயில் நிலையம் அருகே உள்ள ஜே.கே.மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில், விவசாய தசராவை, விவசாய துறை அமைச்சர் செலுவராயசாமி, கால்நடை அமைச்சர் வெங்கடேஷ் துவக்கி வைத்தனர்.
விவசாயத்தில் சாதனை படைத்தவர்களுக்கு பரிசு வழங்கி கவுரவித்தனர். முன்னதாக நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, மாட்டு வண்டியில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் அமைச்சர் செலுவராயசாமி.
விவசாய தசராவில் விவசாயத்திற்கு பயன்படுத்தும் பல ரக இயந்திரங்கள், தானிய விதைகள், உரங்கள், செடிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. எந்தெந்த மண்ணில் என்ன பயிர்களை விளைவிக்க வேண்டும் என்பதை எடுத்து கூறும் வகையில், கண்காட்சி அரங்கு அமைக்கப் பட்டுள்ளது.
குள்ளமாக இருக்கும் பன்னுார் செம்மறி ஆடுகள், காளை மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. விவசாயத்தில் ஈடுபடும் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டு போட்டிகள் இன்று நடக்க உள்ளன.
விவசாய தசராவின் ஒரு பகுதியாக, மாடுகளில் பால் கறக்கும் போட்டி நாளை நடக்க உள்ளது. விவசாய தசரா நடக்கும் இடத்தின் ஒரு பகுதியில், மீன்வளத் துறை சார்பில், மீன்கள் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு மீன் தொட்டிகள் விற்பனைக்காக வைக்கப் பட்டுள்ளன.