/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'108' ஆம்புலன்ஸ்களை அரசே நிர்வகிக்கும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
/
'108' ஆம்புலன்ஸ்களை அரசே நிர்வகிக்கும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
'108' ஆம்புலன்ஸ்களை அரசே நிர்வகிக்கும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
'108' ஆம்புலன்ஸ்களை அரசே நிர்வகிக்கும் அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தகவல்
ADDED : மே 14, 2025 11:05 PM

பெங்களூரு: கர்நாடகாவில் இனி '108' ஆம்புலன்ஸ்கள், ஏஜென்சிகள் மூலமாக நிர்வகிக்கப்படாது. அரசே நிர்வகிக்கும்,” என, மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார்.
பெங்களூரின், மெஜஸ்டிக் பி.எம்.டி.சி., பஸ் நிலையம் முன், புதிதாக அமைக்கப்பட்ட ஒயிட் டாப்பிங் சாலையை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் நேற்று திறந்து வைத்தார். பின், அவர் அளித்த பேட்டி:
வரும் நாட்களில் '108' ஆம்புலன்ஸ்கள் நிர்வகிப்பு பொறுப்பு, எந்த ஏஜென்சியிடமும் ஒப்படைக்கப்படாது. அரசே நிர்வகிக்கும். ஆம்புலன்ஸ் சேவையை வழங்கும். ஏற்கனவே சாம்ராஜ்நகரில் சோதனை முறையில், ஆம்புலன்ஸ்களை அரசு நிர்வகிக்க துவங்கியுள்ளது.
இதற்கு முன்பு ஆம்புலன்ஸ் நிர்வகிப்பு பொறுப்பை, ஏஜென்சிகளிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆம்புலன்ஸ்களை சரியாக நிர்வகிப்பதில்லை, ஊழியர்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை என, பல்வேறு புகார்கள் வந்துள்ளன. எனவே இந்த பொறுப்பை, அரசே ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது.
பெங்களூரின் இதய பகுதியில் உள்ள, மெஜஸ்டிக் பஸ் நிலையம், அனைத்து வழித்தடங்களையும் இணைக்கிறது. எனவே இங்குள்ள சாலைகள் தரமாக இருக்கும்படி, பார்த்துக் கொள்ள வேண்டும். பள்ளங்கள் இல்லாத சாலை அமைப்பது, எங்கள் கடமை.
பா.ஜ.,வினர் பேரணி நடத்துவதற்கு முன்பு, பாகிஸ்தானுக்கு எதிரான போரை நிறுத்தியது ஏன் என, பிரதமர் நரேந்திர மோடியிடம் கேள்வி எழுப்பட்டும். போர் நிறுத்தம் அறிவித்தது ஏன் என்பது தெரியவில்லை.
அமெரிக்க அதிபர் டிரம்ப் தலையிட்டது ஏன் என தெரியவில்லை. இந்த கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும்.
டிரம்ப் கூறியதை, மோடி எதற்காக கேட்க வேண்டும்? முடியாது என, அழுத்தமாக கூறியிருக்க வேண்டும். டிரம்பை கண்டால் மோடிக்கு பயம் என, தோன்றுகிறது. எனவே அவர் பேசவில்லை. இந்திராவுக்கும், மோடிக்கும் இருக்கும் வித்தியாசம் இது தான்.
கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் மோடி ஒரு முறையும், செய்தியாளர்கள் சந்திப்பு நடத்தியது இல்லை. ஊடகத்தினரை விலக்கி வைத்துள்ளார். தேர்தல் உரையாற்றுவதற்கு பிரதமர் தயாராக இருக்கிறார். 'மன் கி பாத்' நடத்த தயாராக இருக்கிறார். தேவையின்றி உரையாற்றுவதை விட்டு விட்டு, விளக்கம் அளிக்கட்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.