மேகதாது அணை திட்டம் விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு
மேகதாது அணை திட்டம் விரைவுபடுத்த அமைச்சர் உத்தரவு
ADDED : ஆக 13, 2026 11:23 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: ''மேகதாது அணை திட்ட பணியை விரைவுபடுத்துங்கள்,'' என்று, நீர்பாசன துறை அதிகாரிகளுக்கு, அமைச்சர் செலுவராயசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
நீர்ப்பாசன துறையின் புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள செலுவராயசாமி, நீர்ப்பாசன துறை அதிகாரிகளுடன் பெங்களூரில் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:
பெங்களூரு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளுக்கு, நிரந்தர குடிநீரை வழங்குவதில் மேகதாது அணை திட்டம் முக்கிய பங்கு வகிக்கும். திட்டம் தொடர்பாக எந்த விஷயத்திலும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை எடுங்கள். மேகதாது திட்ட பணியை விரைவுபடுத்துங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
