தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ மதிய உணவு திட்டத்துக்கு சென்னம்மாவின் பெயர்?

 மதிய உணவு திட்டத்துக்கு சென்னம்மாவின் பெயர்?

 மதிய உணவு திட்டத்துக்கு சென்னம்மாவின் பெயர்?


ADDED : ஆக 13, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 11:23 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: முன்னாள் அமைச்சர்கள் தேவ கவுடா மனைவி சென்னம்மா உள்ளிட்டோரின் மறைவுக்கு மேல்சபையில் நேற்று இரங்கல் தீர்மானம் நிறைவற்றப்பட்டது.

காங்கிரஸ் சார்பில் அமைச்சர் யதீந்திரா, பா.ஜ., சார்பில் சலவாதி நாராயணசாமி, ம.ஜ.த., சார்பில் டி.ஏ.ஷ்ரவணா ஆகியோர் இரங்கல் தெரிவித்து பேசினர்.

டி.ஏ.ஷ்ரவணா பேசுகையில்,“தேவகவுடாவின் மனைவி தனது வீட்டுக்கு யார் வந்தாலும், அவருக்கு உணவு அளிக்கும் பண்பு உடையவர். கட்சி பாகுபாடு எதுவும் பார்க்க மாட்டார். எந்த கட்சியினர் வந்தாலும், அவருக்கு உணவு வழங்கி மகிழ்வார்.

''இதனால், அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்திற்கு சென்னம்மாவின் பெயரை சூட்ட வேண்டும்,” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us