தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ நடிகையின் தங்கை பலாத்காரம் தனியார் நிறுவன ஊழியர் கைது

 நடிகையின் தங்கை பலாத்காரம் தனியார் நிறுவன ஊழியர் கைது

 நடிகையின் தங்கை பலாத்காரம் தனியார் நிறுவன ஊழியர் கைது


ADDED : ஆக 13, 2026 11:23 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 13, 2026 11:23 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சந்திரா லே - அவுட்: பெங்களூரு சந்திரா லே - அவுட்டில் வசிக்கும் கன்னட நடிகை ஒருவருக்கு, 25 வயதில் தங்கை உள்ளார். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். இவருக்கும், நிறுவனத்தில் பணியாற்றும் தலகட்டபுராவின் ராகவேந்திரா, 30, என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.

திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி காதலியுடன், ராகவேந்திரா உல்லாசமாக இருந்துள்ளார். காதலியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தி லட்சக்கணக்கில் கடன் வாங்கியுள்ளார். பணத்தை திரும்ப செலுத்ததால், ராகவேந்திராவுக்கும், காதலிக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது.

உல்லாச வீடியோ ஒரு கட்டத்தில் ராகவேந்திராவுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தை இருப்பது பற்றி காதலிக்கு தெரிந்தது. இதுபற்றி கேட்டு தகராறு செய்த போது, நாம் இருவரும் உல்லாசமாக இருந்த வீடியோக்கள் என்னிடம் உள்ளன; சமூக வலைத்தளங்களில் வெளியிடுவேன் என்று காதலியை, ராகவேந்திரா மிரட்டியுள்ளார்.

தனது தங்கை பிரச்னையில் சிக்கியது பற்றி நடிகைக்கு தெரிந்தது. நான்கு மாதங்களுக்கு முன், சந்திரா லே - அவுட் போலீசில் புகார் செய்தார். நடிகையின் தங்கை என்பதால் பிரச்னை வர கூடாது என்பதற்காக, ராகவேந்திராவை அழைத்து எச்சரித்த போலீசார், அவரது மொபைல் போனில் இருந்த வீடியோவை அழித்தனர்.

தக்காளி சாஸ் இந்நிலையில், சில நாட்களுக்கு முன், காதலியிடம் வீடியோ காலில் பேசிய ராகவேந்திரா, 'எனது கையை கத்தியால் அறுத்து விட்டேன்; கடைசியாக உன்னை பார்க்க வேண்டும்' என்று கூறியுள்ளார்.

இதை உண்மை என நம்பி ராகவேந்திரா கூறிய இடத்திற்கு அந்த பெண் சென்றார். அங்கு சென்று பார்த்ததும் கையில் தக்காளி சாஸை ஊற்றி ராகவேந்திரா நாடகமாடியது தெரிந்தது.

அங்கிருந்து புறப்பட முயன்ற காதலியை, ராகவேந்திரா வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்து உள்ளார். தொடர்ந்து மிரட்டியுள்ளார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் சந்திரா லே - அவுட் போலீசில் புகார் செய்தார். ராகவேந்திராவை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இதற்கிடையில், தனது காதலி, அவரது அக்காவான நடிகை மீது, ராகவேந்திராவும் சில தினங்களுக்கு முன், தலகட்டபுரா போலீசில் புகார் செய்தார். அக்காவும், தங்கையும் சேர்ந்து தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி இருந்தார்.

விசாரணைக்கு ஆஜராக போலீஸ் சம்மன் அனுப்பியும் இருவரும் வரவில்லை என்பதும் தெரிந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us