தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு விலக அமைச்சர் ஜார்ஜ் திட்டம்?

 சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு விலக அமைச்சர் ஜார்ஜ் திட்டம்?

 சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பு விலக அமைச்சர் ஜார்ஜ் திட்டம்?


ADDED : மார் 09, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 06:09 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிக்கமகளூரு: ''சிக்கமகளூரு மாவட்டத்தில், ஐந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில் ஒருவரை அமைச்சராக்கி, இந்த மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சராக்கட்டும்,'' என, மின் துறை அமைச்சர் ஜார்ஜ் தெரிவித்தார்.

சிக்கமகளூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:

நான் அமைச்சர் பதவியில் இருந்தாலும், இல்லை என்றாலும், சிக்கமகளூரு மாவட்ட முன்னேற்றத்தில், தனிப்பட்ட முறையில் எனக்கு அக்கறை இருக்கும்.

அமைச்சரவை மாற்றி அமைப்பது குறித்து, எனக்கு தெரியாது. இது முதல்வர் சித்தராமையா முடிவு செய்ய வேண்டிய விஷயமாகும்.

அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டால், சிக்கமகளூரின் எம்.எல்.ஏ.,க்களில் ஒருவருக்கு, அமைச்சர் பதவி அளிக்க வேண்டும். மாவட்டத்தில் காங்கிரசை சேர்ந்த ஐந்து எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.

இவர்களில் ஒருவரை அமைச்சரவையில் சேர்த்து, மாவட்ட பொறுப்பு அமைச்சராக்க வேண்டும் என்பது, என் விருப்பம். இது குறித்து, முதல்வரிடம் வலியுறுத்துவேன்.

தினம் 24 மணி நேரமும், மக்களுடன் இருந்து பணியாற்றும், உள்ளூர் எம்.எல்.ஏ.,விடம் மாவட்ட பொறுப்பை ஒப்படைப்பது நல்லது. வரும் நாட்களில் என் விருப்பம் நிறைவேறும் என, நம்புகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதன் மூலமாக, சிக்கமகளூரு மாவட்ட பொறுப்பில் இருந்து ஜார்ஜ் விலக முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us