/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சர்
/
விபத்தில் சிக்கியவருக்கு உதவிய அமைச்சர்
ADDED : ஏப் 22, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹூப்பள்ளி: ஹூப்பள்ளி நகரின், ஷிரூரா பார்க், டெண்டர் ஷியூர் சாலையில் அதி வேகமாக சென்ற இரண்டு பைக்குகள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் பயணம் செய்த நபர் ஒருவர், தலையில் அடிபட்டு விழுந்து கிடந்தார்.
அப்போது அதே பாதையில் காரில் சென்று கொண்டிருந்த மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, விபத்து நடந்திருப்பதை கவனித்து காரை நிறுத்தும்படி கூறினார். கீழே இறங்கி, காயமடைந்த நபரை, தன் மெய்க்காவல் வாகனத்தில் கிம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பினார்.
மேலும், கிம்ஸ் மருத்துவமனை இயக்குநருக்கு, போன் செய்து, காயமடைந்த நபருக்கு அவசர சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக் கொண்டார்.