ADDED : ஜூன் 20, 2026 11:01 PM

அ நிறம் | அளவு
பெங்களூரு: கர்நாடகாவில் உள்ள குறைந்த விலை மருந்து கடைகளில் அமைச்சர் காதர் ஆய்வு செய்தார்.
பெங்களூரு விதான்சவுதாவில் சுகாதாரத்துறை அமைச்சர் காதர் நேற்று அளித்த பேட்டி:
மாநிலத்தில் உள்ள குறைந்த விலை மருந்து கடைகளில் விற்கப்படும் மருந்துகள், மாத்திரைகளின் தரம்; மருந்துகளுக்கு அரசின் அங்கீகாரம் உள்ளதா என்பதை தெரிந்து கொள்வது, சுகாதாரத்துறையின் கடமையாகும்.
குறைந்த விலை மருந்து கடைகளின், உண்மையான சூழ்நிலையை தெரிந்து, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டியுள்ளது.
சில மருந்து கடைகளில் முக்கியமான மருந்துகளை தவிர் த்து, வேறு பொருட்கள் விற்பதாக, புகார்கள் வந்துள்ளன. எனவே, அந்த கடைகளில் ஆய்வு மேற்கொண்டேன்.
இவ்வாறு அமைச்சர் காதர் கூறினார்.
