இன்று யோகா தினம் காலை 5:00 மணிக்கு 'மெட்ர ோ ' துவக்கம்
இன்று யோகா தினம் காலை 5:00 மணிக்கு 'மெட்ர ோ ' துவக்கம்
ADDED : ஜூன் 20, 2026 11:00 PM
அ நிறம் | அளவு
பெங்களூரு: 'சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, இன்று அதிகாலை 5:00 மணி முதல், மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்' என, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
வழக்கமாக ஞாயிற்று கிழமைகளில் மெட்ரோ சேவைகள், காலை, 7:00 மணிக்கு தான் துவங்கும். இருப்பினும், சர்வதேச யோகா தினத்தை ஒட்டி, பெங்களூரு நகரில் பல இடங்களில் யோகா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
இதில், மக்கள் பங்கேற்க வசதியாக, இன்று அதிகாலை 5:00 மணிக்கே முதல் மெட்ரோ ரயில் சேவைகள் துவங்கும்.
ஆரோக்கியமான வாழ்க்கை முறையை நோக்கி அடி எடுத்து வைக்கும் இந்த நாளில், யோகா தின கொண்டாட்டங்களில் பொது மக்கள் உற்சாகமாக பங்கேற்க வேண்டும். எனவே பயணியர், இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டு உள்ளது.
