தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பிடதி விவசாயிகள் நல்லவர்கள் முதல்வர் சிவகுமார் 'ஐஸ்'

 பிடதி விவசாயிகள் நல்லவர்கள் முதல்வர் சிவகுமார் 'ஐஸ்'

 பிடதி விவசாயிகள் நல்லவர்கள் முதல்வர் சிவகுமார் 'ஐஸ்'


ADDED : ஜூன் 20, 2026 11:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 20, 2026 11:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''பிடதி விவசாயிகள் நல்லவர்கள்; அவர்கள் தவறாக வழிநடத்தப்படுகின்றனர்,'' என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.

பிடதி டவுன்ஷிப் திட்டம் தொடர்பாக குமாரசாமியின் கேள்விக்கு, பெங்களூரில் நேற்று முதல்வர் சிவகுமார் அளித்த பேட்டி:

பிடதி டவுன்ஷிப் திட்டத்தில், குமாரசாமி முதல்வராக இருந்தபோது, மேம்படுத்தப்பட்ட நிலத்தில், 40 சதவீதம் விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என்று கூறியிருந்தார்.

நாங்கள் 50 சதவீதம் வழங்குவோம் என்று கூறியுள்ளோம். விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 2.50 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கும் பணி துவங்கி உள்ளது.

இத்திட்டத்துக்கான அறிவிப்பை குமாரசாமி வெளியிட, எடியூரப்பா இத்திட்டத்தை தொடர்ந்தார். நாங்கள் இதை மேலும் முன்னெடுத்து செல்கிறோம். புதிதாக எதுவும் செய்யவில்லை.

தற்போதுள்ள 9,000 ஏக்கரில், 1,000 ஏக்கரை முன்னாள் பா.ஜ., முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கையகப்படுத்தினார். எதிர்க்கட்சிகள் அரசியலுக்காக இதை எதிர்க்கின்றனர். புதிய தொழிற்சாலைகள் வர வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர். பிடதி நில மறுஅறிவிப்பு செய்து, சிறைக்கு செல்ல நான் தயாராக இல்லை.

சிவகுமார் முதலில் பிடதி பகுதியை ஏன் சிவப்பு மண்டலமாக அறிவித்தார் என்பதை, எங்களிடம் கூறட்டும். அவர் ஏன் அந்த அறிவிப்பை வெளியிட்டார் என்பதற்கு பதிலளிக்கட்டும். எடியூரப்பா ஏன் அதை தொடர்ந்தார்; அவர் ஆட்சி காலத்தில், அந்த அறிவிப்பை ரத்து செய்ய அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லையா; அவர் ஏன் அதை செய்யவில்லை?

எதிர்க்கட்சிகள் செய்யும் அரசியல் பற்றி எனக்கு கவலையில்லை. 80 சதவீத விவசாயிகள், நிலம் கொடுக்க முன்வந்துள்ளனர். மற்றவர்கள் முன்வராத நிலையில், நான் என்ன செய்ய முடியும்; நாங்கள் சட்டப்படி நடப்போம்.

குமாரசாமி பெரிய மனிதர், ஒரு பெரிய தொழில் துறை அமைச்சர். அவர் தொழில்களை கொண்டு வர விரும்புகிறார். தொழில்களை எங்கே கொண்டுவர வேண்டும்; எப்படி கொண்டு வர வேண்டும், யாருடைய நிலத்தில் கொண்டு வர வேண்டும் என்பதற்கு அவர் தான் பதிலளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us