/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
2026க்குள் 1.80 லட்சம் வீடுகள் அமைச்சர் ஜமீர் அறிவிப்பு
/
2026க்குள் 1.80 லட்சம் வீடுகள் அமைச்சர் ஜமீர் அறிவிப்பு
2026க்குள் 1.80 லட்சம் வீடுகள் அமைச்சர் ஜமீர் அறிவிப்பு
2026க்குள் 1.80 லட்சம் வீடுகள் அமைச்சர் ஜமீர் அறிவிப்பு
ADDED : ஆக 19, 2025 02:25 AM

பெங்களூரு : ''கர்நாடக குடிசை பகுதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கீழ், 2026க்குள் 1,80,253 வீடுகள் கட்டி முடிக்கப்படும்,'' என, சட்டசபையில், மாநில வீட்டு வசதித் துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.
சட்டசபையில் பா.ஜ., - எம்.எல்.ஏ., க்கள் சித்து பாட்டீல், அரவிந்த் பெல்லத் ஆகியோர் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ஜமீர் அகமது கான் கூறியதாவது:
கர்நாடக குடிசைவாழ் மேம்பாட்டு ஆணையம் சார்பில் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா கீழ், பயனாளிகள் பணம் செலுத்துவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனால் வீடு கட்டும் பணி தாமதமாகி வருகிறது. இது தொடர்பாக முதல்வரிடம் விவாதித்தேன்.
அப்போது, ஏழை பயனாளிகளுக்காக அரசே பணம் செலுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது. இதற்காக அரசு ஒதுக்கிய 500 கோடி ரூபாயில், 36,789 வீடுகள் கட்டி, பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் கட்டமாக 40,345 பயனாளிகளுக்கு வீடுகள் ஒப்படைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. 2026க்குள் வீடுகளை கட்டி முடிக்கும்படி முதல்வர் சித்தராமையா அறிவுறுத்தி உள்ளார். எனவே, அடுத்தாண்டு இறுதிக்குள் 1,80,253 வீடுகள் கட்டி முடிக்கப்படும்.
அதுபோன்று ராஜிவ் காந்தி வீட்டு வசதி கார்ப்பரேஷன் சார்பில் கட்டப்பட்டு வரும் வீடுகளும், நிதி இல்லாமல், 47,870 வீடுகள் கட்டுமான பணிகள் தாமதமாகி வருகின்றன. அரசும், குறிப்பிட்ட தொகையை விடுவிக்க ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு, அனுமதி பெறப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.