தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பகல் கனவு காண்கிறார்; அமைச்சர் ஜமீர் 'நையாண்டி'

 பகல் கனவு காண்கிறார்; அமைச்சர் ஜமீர் 'நையாண்டி'

 பகல் கனவு காண்கிறார்; அமைச்சர் ஜமீர் 'நையாண்டி'


ADDED : ஜன 28, 2026 06:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 28, 2026 06:37 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாவணகெரே: ''அனைவரும் இரவில் கனவு காண்பர்; குமாரசாமியோ பகல் கனவு காண்கிறார்,'' என வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான் தெரிவித்தார்.

தாவணகெரேயில் நேற்று அவர் கூறியதாவது:

அனைவரும் இரவில் கனவு காண்பர். ஆனால், மத்திய அமைச்சர் குமாரசாமி பகலில் கனவு காண்கிறார். 2013, 2019, 2023ம் ஆண்டுகளில் முதல்வராவேன் என்று குமாரசாமி கூறினார்; ஆனால், அவர் நினைத்தது நடக்கவில்லை.

சித்தராமையா ம.ஜ.த.,வில் இருந்த போது, 59 இடங்களை வென்றிருந்தார். குமாரசாமியால், அதை அடைய முடியவில்லை. கடந்த 2023 தேர்தலில், 19 இடங்களில் மட்டுமே அவரால் வெற்றி பெற முடிந்தது. இதிலிருந்து, அவர் பகலில் கனவு காண்கிறார் என்பது தெளிவாகிறது.

எனது அரசியல் குரு தேவகவுடா. ஒரு காலத்தில் ம.ஜ.த.,வுக்கு அதிகாரம் இருந்தது. பா.ஜ.,வுடன் கூட்ட ணி வைத்ததன் மூலம், அதை இழந்து விட்டார்.

தாவணகெரே தெற்கு சட்டசபை தொகுதியில், இது என் கடைசி தேர்தல் என்றும், எனக்கு பின் சிறுபான் மையினருக்கு இடங்களை வழங்குவோம் என்றும்,எதிர்காலத்தில் சிறுபான்மையினரை நிறுத்தி, அவர்களை வெற்றி பெற செய்வேன் என்றும் மறைந்த எம்.எல்.ஏ., சாமனுார் சிவசங்கரப்பா முன்னர் கூறியிருந்தார்.

சிறுபா ன்மையினருக்கு டிக்கெட் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது. இதனை கட்சி த லைமைக்கு தெரியப்படுத்துவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us