/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
என் சாவுக்கு அமைச்சர் ஜமீர் தான் காரணம் ரூ.2 கோடி ஏமாந்த மக்காச்சோள வியாபாரி கதறல்
/
என் சாவுக்கு அமைச்சர் ஜமீர் தான் காரணம் ரூ.2 கோடி ஏமாந்த மக்காச்சோள வியாபாரி கதறல்
என் சாவுக்கு அமைச்சர் ஜமீர் தான் காரணம் ரூ.2 கோடி ஏமாந்த மக்காச்சோள வியாபாரி கதறல்
என் சாவுக்கு அமைச்சர் ஜமீர் தான் காரணம் ரூ.2 கோடி ஏமாந்த மக்காச்சோள வியாபாரி கதறல்
ADDED : அக் 30, 2025 04:48 AM
சிக்கபல்லாபூர்: 'என் சாவுக்கு அமைச்சர் ஜமீர் அகமது கான் தான் காரணம்' என கூறி, 2 கோடி ரூபாய் ஏமாந்த மக்காச்சோள வியாபாரி கண்ணீர் வடித்ததால், அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு ஏற்பட்டது.
சிக்கபல்லாபூரை சேர்ந்தவர் ராமகிருஷ்ணா; மக்காச்சோள வியாபாரி. இவர், விவசாயிகளிடம் இருந்து மக்காச்சோளத்தை கொள்முதல் செய்து, ஹைதராபாத்தை சேர்ந்த அக்பர் என்பவருக்கு விற்பனை செய்தார்.
இதற்காக அக்பரிடம் இருந்து ராமகிருஷ்ணாவுக்கு 2 கோடி ரூபாய் வர வேண்டி இருந்தது. பண விஷயத்தில் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டது. அக்பர் பணத்தை கொடுக்கவில்லை.
இதுகுறித்து ராமகிருஷ்ணா அளித்த புகாரில், அக்பர் மீது சிக்கபல்லாபூர் பெரேசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து, அக்பரை கைது செய்தனர்.
நேரடி பொறுப்பு பெரேசந்திரா எஸ்.ஐ., ஒருவரிடம் பேசிய, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், 'அக்பர் எனக்கு தெரிந்தவர். அவரை விட்டுவிடுங்கள்' என, மொபைல் போனில் பேசிய ஆடியோ, சில தினங்களுக்கு முன்பு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், சிக்கபல்லாபூர் டவுனில் உள்ள ஷாதி பவனில் நேற்று நடந்த, அரசு நிகழ்ச்சியில் ஜமீர் அகமது கான் கலந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு வந்த ராமகிருஷ்ணா, அமைச்சரிடம் சென்று, 'என்னை ஏமாற்றியவரை விடுவிக்கும்படி நீங்கள் கூறியது ஏன்?' என்று கேள்வி எழுப்பினார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சரின் நிகழ்ச்சிக்கு இடையூறு செய்ததாக, ராமகிருஷ்ணாவை, போலீசார் அழைத்துச் சென்றனர்.
ராமகிருஷ்ணா கூறியதாவது:
என்னிடம் மக்காச்சோளம் விற்ற விவசாயிகள் தினமும் என் வீட்டின் முன் வந்து, பணம் கேட்கின்றனர். எனக்கு அக்பர் பணம் கொடுக்கவில்லை. நான் அளித்த புகாரில் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜமீர் அகமது கான் கூறியதால், அவரை போலீசார் விடுவித்தனர். இப்போது எனக்கு பணம் கொடுக்க, அக்பர் மறுக்கிறார். 'உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள்' என்று மிரட்டுகிறார்.
'எனக்கு நியாயம் கிடைக்க வேண்டும்' என்று ரத்தத்தில் கடிதம் எழுதி, அதை ஊடகத்தினரிடம் கொடுத்துள்ளேன். எனக்கு பணம் கிடைக்காவிட்டால், தற்கொலை செய்து கொள்வேன். என் சாவுக்கு ஜமீர் அகமது கான் தான் நேரடி பொறுப்பு.
இவ்வாறு கண்ணீருடன் கூறினார்.
பேசியது உண்மை தான் அக்பருக்கு ஆதரவாக, எஸ்.ஐ.,யிடம் நான் பேசியது உண்மை தான். ஆனால், அக்பரை விடுவிக்கும்படி நான் கூறவில்லை. இருவருக்கும் இடையே சமாதானம் பேசி, பிரச்னை இல்லாமல் வழக்கை முடித்து வையுங்கள் என்று தான் கூறினேன். இது ஆடியோவில் தெளிவாக உள்ளது. விவசாயிக்கு துரோகம் செய்யும் நபர் நான் இல்லை. ராமகிருஷ்ணாவுக்கு நியாயம் கிடைக்க உதவும்படி, சிக்கபல்லாபூர் மாவட்ட காங்கிரசாரிடம் கூறி உள்ளேன். ஜமீர் அகமது கான், மாநில அமைச்சர், வீட்டு வசதித்துறை ***

