sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ இரண்டாவது சித்தராமோத்சவம் அமைச்சர் ஜமீர் வர்ணனை

இரண்டாவது சித்தராமோத்சவம் அமைச்சர் ஜமீர் வர்ணனை

இரண்டாவது சித்தராமோத்சவம் அமைச்சர் ஜமீர் வர்ணனை


ADDED : மே 18, 2025 11:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 18, 2025 11:12 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காங்கிரஸ் அரசுக்கு, இரண்டு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு, விஜயநகரா மாவட்டம் ஹொஸ்பேட்டில் நாளை சாதனை மாநாடு நடக்கிறது. முதல்வர் சித்தராமையாவின் சக்தியை காட்ட, அவரது ஆதரவாளர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சாதனை மாநாட்டில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல், காங்., தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உட்பட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். வருவாய்த்துறை சார்பில், ஒரு லட்சம் மக்களுக்கு உரிமை பத்திரம், நில ஆவணங்கள் வழங்கப்படுகின்றன.

மாநாட்டில், முதல்வர் சித்தராமையாவின் சக்தியை காட்ட, அவரது ஆதரவு அமைச்சர்கள் தயாராகி உள்ளனர்.

பிறந்த நாள்


சட்டசபை தேர்தலுக்கு முன், தாவணகெரேவில், அவரது பிறந்த நாளை முன்னிட்டு, 'சித்தராமோற்சவா' நடத்தினர். அதன்பின் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்து, சித்தராமையா முதல்வராகவும் இருக்கிறார்.

பல்வேறு இடையூறுகள், நெருக்கடிகளை கடந்து இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதே போன்று ஐந்து ஆண்டுகள் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பது, அவரது ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் விருப்பமாகும்.

இது குறித்து, வீட்டு வசதித்துறை அமைச்சர் ஜமீர் அகமது கான், ஹொஸ்பேட்டில் நேற்று அளித்த பேட்டி:

வரும் 20ம் தேதி நடக்கும் சாதனை மாநாட்டுக்கு, அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இங்குள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் நடக்கும் விழா, இரண்டாவது சித்தராமோத்சவமாக இருக்கும்.

3,700 அரசு பஸ்கள்


மாநாட்டுக்கு மக்களை அழைத்து வர, 3,700 கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. நான், 2,000 பஸ்களை ஏற்பாடு செய்துள்ளேன். இரண்டு லட்சம் பேருக்கு உணவு வசதி செய்யப்பட்டுள்ளது. 1.50 லட்சம் இருக்கைகள் பொருத்தப்படும். காலை 9:00 மணி முதல் உணவு வழங்கப்படும்.

அவசர தேவைக்காக 50,000 உணவு பாக்கெட்டுகள், 5 லட்சம் குடிநீர் பாக்கெட்டுகள் வழங்கப்படும். ஹொஸ்பேட் சுற்றுப்பகுதிகளில், 200 ஏக்கர் பகுதிகளில் 10,000 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்த, வசதி செய்யப்படுகிறது.

140 க்கு 60 அடி பரப்பளவில், பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மத்திய பகுதியில் 300 பேர் அமர்வர். வலது, இடது புறத்தில் உள்ள மேடைகளில் தலா 50 பேர் அமரலாம். காலை 10:00 மணிக்கு விழா துவங்கி, மதியம் 2:00 மணிக்கு முடியும். வெயில் அதிகம் இருப்பதால், நிழல் வசதிக்காக 'ஜெர்மன் டென்ட்' அமைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us