தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ வெளிவட்ட சாலையை மேம்படுத்த திட்டம் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தகவல்

 வெளிவட்ட சாலையை மேம்படுத்த திட்டம் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தகவல்

 வெளிவட்ட சாலையை மேம்படுத்த திட்டம் அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தகவல்


ADDED : ஜூலை 25, 2026 11:36 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 25, 2026 11:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் அதிகாரத்தின் கீழ், வெளிவட்ட சாலையை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது,'' என, அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா தெரிவித்தார்.

பெங்களூரு சில்க்போர்டு - கே.ஆர்.,புரம் வெளிவட்ட சாலையில் வசிக்கும் மக்களுடன், பெங்களூரு நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:

நகருக்குள் உள்ள ஜெயநகரில், சாலைக்காக, 23 சதவீத ம் நிலம் உள்ளது. ஆனால் வெளிவட்ட சாலை பகுதியில் சாலைகளுக்கென, 8 சதவீத நிலம் மட்டுமே உள்ளது. பல ஆண்டுகளாக நடந்து வரும் சட்ட விரோத கட்டுமானங்களே இதற்கு காரணம்.

சி.டி.பி., எனும் விரிவான வளர்ச்சி திட்டத்தின்படி, சாலைகள் அமைக்கவில்லை. இங்கு ஏராளமான அங்கீகரிக்கப்படாத மனைகள் உள்ளன. இந்த மனைகளில் வீடுகள் கட்டும்போது பூங்கா, விளையாட்டு மைதானம், வடிகாலுக்கான இடம் விடுவதில்லை. இப்படியிருக்கையில், இங்கு உள்கட்டமைப்பு மேம்பாடு எப்படி சாத்தியமாகும்.

நெரிசல் அவர்கள், 10 அடிக்கு மட்டுமே சாலைக்கான இடம் விட்டுள்ளனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 30க்கு 40 மனைகளில், 5 - 6 மாடி கட்டடம் கட்டி உள்ளனர். இதனால் வாகனங்கள் நிறுத்த இடமின்றி, சாலையில் நிறுத்துகின்றனர். காரை நிறுத்த இடம் விடாமல் கட்டடம் கட்டி உள்ளனர். எட்டு பேர் மட்டுமே வசிக்கக் கூடிய வீடு கட்டும் இடத்தில், 40 பேர் வசிக்கும் வகையில் வீடுகள் கட்டுகின்றனர்.

சாலையை மீண்டும் சீரமைப்பதால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இணைப்பு சாலைகளில் போக்குவரத்து அளவு மிகவும் அதிகமாக உள்ளது. நான்கு திசைகளிலும் செல்லும் சாலைகளில், போக்குவரத்து பிரச்னைகளை தடுக்க, பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

நடைபாதை நடைபாதையை மேம்படுத்த நாங்கள் கடுமையாக உழைத்து வருகிறோம். இதனால், 5 சதவீதம் மக்கள் நடைபாதையை பயன்படுத்துவர்.

இப்பகுதியில் மெட்ரோ ரயில் சேவை துவக்கினால் மட்டுமே, பெரும்பாலான பிரச்னைகளை தீர்க்க முடியும். இல்லையெனில், இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண முடியாது.

இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us