'ம.ஜ.த.,வை உயிர்ப்புடன் வைக்க அமைச்சர் குமாரசாமி பெருமுயற்சி'
'ம.ஜ.த.,வை உயிர்ப்புடன் வைக்க அமைச்சர் குமாரசாமி பெருமுயற்சி'
ADDED : செப் 01, 2026 08:01 PM
பெங்களூரு: ம.ஜ.த., கட்சி இன்னும் உயிருடன் உள்ளது என்று காட்ட, மத்திய அமைச்சர் குமாரசாமி முயற்சி செய்வதாக, காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் லட்சுமண், நேற்று கூறியதாவது:
மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, கடந்த, 2024ம் ஆண்டு முதல், கடந்த மாதம் வரை, 148 முறை பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். அப்போதெல்லாம், காங்கிரஸ் அரசு மீது பல குற்றச்சாட்டுகளை கூறினார். இதுவரை ஒன்றை கூட அவர் நிரூபிக்கவில்லை.
ஏதேதோ பேசி, தனது கட்சியான, ம.ஜ.த., இன்னும் உயிருடன் உள்ளது என்பதை காட்ட முயற்சி செய்கிறார்.
சித்தராமையா, சிவகுமாருக்கு எதிராக பேசி வந்த அவர், இப்போது, மாநில அமைச்சர் பிரியங்க் கார்கேவுக்கு எதிராக திரும்பியுள்ளார். முறைகேடுகளுக்கு ஆதாரங்கள் உள்ளன என்று கூறும் குமாரசாமி, இதுவரை ஒரு ஆதாரங்களை கூட வெளியிடவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
