/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
3,000 பெண்களுக்கு இன்று வளைகாப்பு அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தகவல்
/
3,000 பெண்களுக்கு இன்று வளைகாப்பு அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தகவல்
3,000 பெண்களுக்கு இன்று வளைகாப்பு அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தகவல்
3,000 பெண்களுக்கு இன்று வளைகாப்பு அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் தகவல்
ADDED : மார் 24, 2025 04:58 AM

பெங்களூரு: மகளிர், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பெலகாவியில் நேற்று அளித்த பேட்டி:
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, பெலகாவியின் சி.பி.எட்., மைதானத்தில் நாளை (இன்று) காலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில் 3,000 கர்ப்பிணியருக்கு சேலை, பூ, பழங்கள், தேங்காய், மஞ்சள், குங்குமம், வளையல் போன்ற மங்கல பொருட்கள் வழங்கி, மடி நிரப்பி சம்பிரதாயப்படி வளைகாப்பு நடத்தப்படும்.
மாற்றுத் திறனாளிகள் தினம், மூத்த குடிமக்கள் தினத்தை முன்னிட்டு, நிகழ்ச்சி நடத்தப்படும். இதில் 1,000 மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களுக்கு மூன்று சக்கர ஸ்கூட்டர் வழங்கப்படும்.
மகளிர் சக்தி குழுக்களை ஊக்கப்படுத்த, மண்டள அளவில் பொருட்காட்சி மற்றும் விற்பனை மேளா ஏற்பாடு செய்யப்படும். பெலகாவி, ஹாவேரி, பாகல்கோட், விஜயபுரா, கார்வார், கதக், தார்வாட் என, ஏழு மாவட்டங்களின் சக்தி குழுக்களின் உறுப்பினர்கள், மேளாவில் பங்கேற்று கைவினை பொருட்கள், உடை, உணவு தின்பண்டங்கள், லம்பானி உடை, மூங்கிலால் தயாரிக்கப்பட்ட பொருட்கள், பல விதமான பைகள் உட்பட மற்ற பொருட்களை கண்காட்சியில் வைக்கலாம்; விற்பனை செய்யலாம்.
'பேட்டி பச்சாவோ, பேட்டி படாவோ' திட்டத்தின் கீழ், பெண் குழந்தைகளின் பெயரில் செடி நடும் நிகழ்ச்சியும் நடத்தப்படும்.
மார்ச் 31 க்கு பின், கிரஹலட்சுமி திட்டத்தின், இரண்டு மாத நிலுவை தொகை வழங்கப்படும். இதற்கு முன், காங்கிரஸ் அரசு இருந்த போது, அங்கன்வாடி ஊழியர்களின் ஊதியம் 2,000 ரூபாய் அதிகரிக்கப்பட்டது.
அதன்பின் வந்த எந்த அரசுகளும் அவர்களின் ஊதியத்தை அதிகரிக்கவில்லை. இம்முறை பட்ஜெட்டில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு 1,000 ரூபாய், உதவியாளர்களுக்கு 750 ரூபாய் ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.
அமைச்சர் ஒருவரை ஹனிடிராப் செய்ய முற்பட்டிருப்பது, துரதிருஷ்டவசமான செயலாகும். இது தொடர்பாக, தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை அமைச்சர் ராஜண்ணா, சட்டசபையில் விவரித்துள்ளார். இது குறித்து, முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் பதில் அளித்துள்ளனர். இந்த விஷயத்தை உள்துறை அமைச்சர் பார்த்து கொள்வார். இது பற்றி நான் அதிகம் பேச மாட்டேன்.
கர்ஜிக்கும் புலிகளையே தற்போது குறி வைக்கின்றனர் என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறியுள்ளார். இதற்கு என்ன அர்த்தம் என்பதை, அவரிடமே கேளுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.