/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விரைவில் 18,000 ஆசிரியர் நியமனம் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
/
விரைவில் 18,000 ஆசிரியர் நியமனம் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
விரைவில் 18,000 ஆசிரியர் நியமனம் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
விரைவில் 18,000 ஆசிரியர் நியமனம் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
ADDED : செப் 05, 2025 11:05 PM

பெங்களூரு: ''மாநிலத்தில் 18,000 ஆசிரியர்களை நியமிக்க, அரசு முடிவு செய்துள்ளது,'' என, தொடக்கம் மற்றும் இடைநிலைக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
பெங்களூரின், விதான்சவுதாவில் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித்துறை சார்பில், ஆசிரியர் தின விழா நேற்று நடந்தது. இதில், அமைச்சர் மது பங்காரப்பா பேசியதாவது:
மாநிலம் முழுதும், 18,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர். கலபுரகி பகுதியில் 5,000 ஆசிரியர்களை நியமிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. மாநிலத்தில் புதிதாக 800 கர்நாடக பப்ளிக் பள்ளிகள் துவக்கப்பட்டுள்ளன. 5,000 இரண்டு மொழிப்பாட திட்டங்கள் கொண்ட பள்ளிகள் திறக்க, அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆயிரமாக இருந்த, அரசு எல்.கே.ஜி., - யு.கே.ஜி., பள்ளிகளின் எண்ணிக்கை 4,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. புதிய உயர்நிலைப் பள்ளிகள், பி.யு.சி., கல்லுாரிகள் திறக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிறார்களின் ஊட்டச்சத்தை அதிகரிக்க, மாநில அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்துள்ளது. வாரத்தில் ஆறு நாட்களும் முட்டை அல்லது வாழைப்பழம் வழங்கப்படுகிறது. காங்கிரஸ் அரசு வந்த பின், பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.