/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
/
விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
விரைவில் 18,000 ஆசிரியர்கள் நியமனம் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
ADDED : நவ 10, 2025 04:24 AM

பெங்களூரு: ''மாநில அரசு பள்ளிகளுக்கு, 12,000 ஆசிரியர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 6,000 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
கர்நாடக அரசு பள்ளிகளில், மாணவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. தரமான கல்வி கிடைப்பது இல்லை. இதன் விளைவாக மாணவர் சேர்க்கை குறைகிறது.
அரசு பள்ளிகள் ஒவ்வொன்றாக மூடப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
'அரசு பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும். கல்வியின் தரம் குறைய, ஆசிரியர்கள் பற்றாக்குறையே காரணம்' என, கல்வி வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரசு பள்ளிகளை மூடாமல், அடிப்படை வசதிகளை செய்து, ஆசிரியர்களை நியமித்து மாணவர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதன்படி ஆசிரியர்களை நியமிக்க, அரசு தயாராகி வருகிறது.
இது குறித்து, தொடக்க கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா, குடகில் நேற்று அளித்த பேட்டி:
அரசு பள்ளிகளை பலப்படுத்த, முதல்வர் சித்தராமையா தலைமையிலான அரசு, திட்டம் வகுத்துள்ளது. தனியார் பள்ளிகளை போன்று, அரசு பள்ளிகளிலும் எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு கிராம பஞ்சாயத்து எல்லையில், கர்நாடக பப்ளிக் பள்ளிகள் திறக்க, அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இப்பள்ளிகளில் மாணவர்களின் வசதிக்காக, இலவச போக்குவரத்து வசதி செய்யப்படும்.
அரசு பள்ளிகளில் கல்வியின் தரத்துக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேவையான இடங்களில் புதிய கட்டடங்கள் கட்டப்படுகின்றன. இலவச மின்சாரம் வழங்கப்படுகிறது. சிறப்பு வகுப்புகள் நடத்தி, தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதால், மாணவர்களின் கல்விக்கு பாதிப்பு ஏற்படுவதை, அரசும் கவனித்துள்ளது. எனவே அரசு பள்ளிகளுக்கு, 12,000 ஆசிரியர்கள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளுக்கு 6,000 ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்துள்ளோம். விரைவில் இப் பணிகள் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

