/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கவுரவ பேராசிரியர்களின் கவுரவ தொகை அமைச்சர் மது பங்காரப்பா திட்டவட்டம்

ADDED : மார் 18, 2025 05:16 AM

பெங்களூரு: ''கவுரவ பேராசிரியர்களுக்கு, பாக்கியுள்ள கவுரவ தொகை நிர்ணயித்த காலத்துக்குள் வழங்கப்படும்,'' என, மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார்.
மேல்சபை கேள்வி நேரத்தில், உறுப்பினர்கள் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் மது பங்காரப்பா கூறியதாவது:
கவுரவ பேராசிரியர்களுக்கு, அரசு சார்பில் மாதந்தோறும் 10,500 ரூபாய் கவுரவ தொகை வழங்கப்படுகிறது. சமீபத்தில் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்த பட்ஜெட்டில், இவர்களுக்கு 2,000 ரூபாய் அதிகரித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
மாண்டியா உட்பட சில மாவட்டங்களில் மட்டும், பேராசிரியர்களுக்கு கவுரவ தொகை வழங்குவது பாக்கியுள்ளது. சில தொழில்நுட்ப பிரச்னைகளால் வழங்கப்படவில்லை. இன்னும் மூன்று நாட்களில், பணம் வழங்கப்படும்; யாருக்கும் சந்தேகம் வேண்டாம்.
கவுரவ பேராசிரியர்களின் கவுரவ தொகையை அதிகரிக்க வேண்டும் என, உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முதல்வர் சித்தராமையாவுடன் ஆலோசித்து, சரியான முடிவு எடுக்கப்படும். கவுரவ பேராசிரியர்கள் நலனை காக்க, அரசு தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.