தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை 2027க்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு

 எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை 2027க்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு

 எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை 2027க்குள் முடிக்க அமைச்சர் உத்தரவு


ADDED : பிப் 06, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 06, 2026 05:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: ''எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை, 2027 இறுதிக்குள் முடிக்க வேண்டும்,'' என்று அதிகாரிகளுக்கு, வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா அறிவுறுத்தி உள்ளார்.

பெங்களூரு விதான் சவுதாவில், வருவாய் துறை அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா, எத்தினஹொளே குடிநீர் திட்டம் தொடர்பாக மூன்று மாவட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

அப்போது அவர்பேசியதாவது:

கோலார், சிக்கபல்லாப்பூர், பெங்களூரு ரூரல், ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் பிரச்னைக்கு, நிரந்தர தீர்வு காணும் வகையில், எத்தினஹொளே குடிநீர் திட்டத்தை அரசு மேற்கொண்டுள்ளது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

எத்தினஹொளே நீர், துமகூரு மாவட்ட எல்லையை அடைந்து உள்ளது. அடுத்த கட்டமாக தொட்டபல்லாபூருக்கும், அங்கிருந்து கோலார், பங்காருபேட்டை, குந்தன்கேட் வழியாக குழாய் பதிக்கும் பணியையும், சிந்தாமணி, சீனிவாசபுரா வழியாக முல்பாகலுக்கும் குழாய் பதிக்கும் பணியை உடனடியாக துவங்க வேண்டும்.

வரும் 2027 இறுதிக்குள் பெங்களூரை சுற்றியுள்ள கிராமங்களுக்கு, குடிநீர் வழங்கும் வகையில், பணிகளை துரிதப்படுத்தி, நிறைவு செய்ய வேண்டும். குடிநீருக்காக 261.90 கி.மீ., துாரத்துக்கு குழாய்கள் பதிக்க வேண்டும்.

இதற்கான நிலத்தை கையகப்படுத்தும் பணிகளை, அதிகாரிகள் உடனடியாக மேற்கொளள் வேண்டும். கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மூலம், கிராமங்களுக்கு குடிநீர் வினியோக்க, சுத்திகரிப்பு நிலையங்கள் ஏற்படுத்த வேண்டும். இதற்கான முன்மொழிவுகளை விரைவாக தயாரித்து ஒப்புதலுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில், கோலார் மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் பைரதி சுரேஷ், சிக்கபல்லாபூர் பொறுப்பு வகிக்கும் அமைச்சர் எம்.சி.சுதாகர், பெங்களூரு ரூரல் மாவட்ட பொறுப்பு வகிக்கும் அமைச்சர் முனியப்பா மற்றும் துறை அதிகாரிகள், மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us