மழை நீர் கால்வாய் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
மழை நீர் கால்வாய் சீரமைப்பு பணி விரைந்து முடிக்க அமைச்சர் உத்தரவு
ADDED : மே 04, 2026 10:58 PM

பெங்களூரு: 'அடுத்த, 15 நாட்களில், முக்கியமான மழை நீர் கால்வாய்களில் மண் மற்றும் குப்பைகளை அள்ளி சீரமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்' என, வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா உத்தரவிட்டார்.
மழைக்காலம் நெருங்குவதால், மழை நீர் கால்வாய்கள் அடைப்பை சரி செய்யும் பணிகள், பெங்களூரின் பல இடங்களில் நடக்கின்றன.
ஹெப்பால் மழை நீர் கால்வாய் துாய்மை பணி நடக்கிறது. இதை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா நேற்று பார்வையிட்டார்.
சில இடங்களில் பணிகள் தரமாக இல்லாததை கண்ட அவர், அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார். பணிகள் தரமாக நடக்கிறதா என, கண்காணிக்கும்படி அறிவுறுத்தினார். அடுத்த, 15 நாட்களுக்குள், முக்கியமான மழை நீர் கால்வாய்களில் மண் மற்றும் குப்பைகளை அள்ளி சீரமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும்,
மழைக்காலம் நெருங்குகிறது. எந்த அசம்பாவிதங்களும் ஏற்படாமல் இருக்க, சாக்கடைகள், மழை நீர் கால்வாய்களை சுத்தம் செய்து, மழை நீர் தடையின்றி செல்ல வழி செய்ய வேண்டும் ஒவ்வொரு மழைக்காலத்திலும், பெங்களூரின் சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. மக்கள் தொந்தரவுக்கு ஆளாகின்றனர். அசம்பாவிதங்களும் நடக்கின்றன.
இதேபோன்று நடக்காமல், இப்போதிருந்நே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுங்கள் என, அதிகாரிகளுக்கு அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா உத்தரவிட்டார்.
