தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ கலால் துறை துணை கமிஷனரை 'சஸ்பெண்ட்' செய்ய அமைச்சர் உத்தரவு

 கலால் துறை துணை கமிஷனரை 'சஸ்பெண்ட்' செய்ய அமைச்சர் உத்தரவு

 கலால் துறை துணை கமிஷனரை 'சஸ்பெண்ட்' செய்ய அமைச்சர் உத்தரவு


ADDED : ஜூன் 17, 2026 01:55 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 01:55 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மைசூரு: ''மதுபான விடுதியில் ஏற்பட்ட தீ விபத்து தொடர்பாக, கலால் வரி துணை கமிஷனர் 'சஸ்பெண்ட்' செய்ய பரிந்துரைக்கப்பட்டு உள்ளது,'' என, நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் யதீந்திரா தெரிவித்தார்.

மைசூரு நகரின், திட்டஹள்ளி நான்காவது ஸ்டேஜ் அருகில், 'பாக்ஸ் டென் லிக்கர் கேரேஜ்' என்ற பெயரில், பார் அண்ட் ரெஸ்டாரென்ட் உள்ளது.

நேற்று முன்தினம் மதியம், சமையல் அறையில் காஸ் சிலிண்டர் வெடித்ததில், இரு ஊழியர்கள் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்து, மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். அமைச்சராக பதவியேற்ற பின், மைசூரு நகருக்கு நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் யதீந்திரா நேற்று வந்தார்.

அப்போது அவர் அளித்த பேட்டி:

விபத்து நடந்த மதுபான விடுதி, எந்த உரிமமும் இல்லாமல் இயங்கி வந்தது. மைசூரில் பல மதுபான விடுதிகள், மதுக்கூடங்கள், உணவகங்கள் உரிமம் பெறாமல் இயங்கி வருவது தெரிய வந்துள்ளது.

சட்ட விரோதமாகவும், உரிமம் பெறாமலும் இயங்கி வரும் மதுபான கடைகள், உணவகங்கள் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க, கலால் துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன்.

உரிமம் இல்லாமல், ஒரு மதுபான கடை நடப்பது தெரிந்தும், கலால் துறை துணை கமிஷனர் அமைதியாக இருந்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவரை 'சஸ்பெண்ட்' செய்யவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், அனைத்து இடங்களிலும் ஆய்வு செய்யும்படி கலால் துறைக்கு உத்தரவிட்டு உள்ளேன். மைசூரில் உள்ள அனைத்து வணிக கட்டடங்களிலும், தீ பாதுகாப்பு தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், இனி இத்தகைய சம்பவம் நடக்காமல் தடுக்கவும் அறிவுறுத்தி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us