/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வனத்துறையில் காலியிடங்கள் நிரப்ப அமைச்சர் உத்தரவு
/
வனத்துறையில் காலியிடங்கள் நிரப்ப அமைச்சர் உத்தரவு
ADDED : நவ 05, 2025 12:43 AM

பெங்களூரு: வனத்துறையில் காலியாக உள்ள மண்டல வன அதிகாரி பணியிடங்களில் 50 சதவீத பதவியை பதவி உயர்வு மூலமும், மீதமுள்ள 50 சதவீத பதவியை, நேரடி ஆட்சேர்ப்பு மூலமும் நிரப்பும்படி, அதிகாரிகளுக்கு வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே உத்தரவிட்டார்.
வனத்துறையில் காலியாக உள்ள இடங்களை நியமிக்கக் கோரி, கடந்த சில நாட்களாக பெங்களூரில் கர்நாடக வன படிப்பு மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
நேற்று வனத்துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரேவை சந்தித்து, தங்கள் கோரிக்கையை வலியுறுத்தினர். அப்போது அமைச்சர் கூறியதாவது:
துணைப்பிரிவு வன அதிகரிகள் பதவியை நிரப்ப வழங்கப்பட்ட பரிந்துரையை, நிர்வாக சீர்திருத்த துறை நிராகரித்துவிட்டது. அதேவேளையில், 50 சதவீதம் பதவி உயர்வு மூலமும், 50 சதவீதம் நேரடி ஆட்சேர்ப்பு மூலமும் நிரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.
தற்போது நீங்கள், வனத்துறையில் உள்ள அனைத்து பதவிகளுக்கும், குறைந்தபட்ச தகுதியாக, வனவியல் பட்டத்தை கருத வேண்டும் என்று கூறி உள்ளனர். ஆனால், கால்நடை அறிவியல் படித்தவர்களையும், விலங்கியல், தாவரவியல் படித்தவர்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் எங்களுக்கு வழிகாட்டுதல் வந்துள்ளது.
இதுகுறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. எனவே, மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு, கல்வியில் கவனம் செலுத்த வேண்டும்.
பூமியையும், இயற்கையையும், சுற்றுச்சூழலையும் பாதுகாப்பது அனைவரின் கடமை. வனத்துறையை தேர்ந்தெடுத்து, சுற்றுச்சூழலுக்கு பாதுகாக்க உறுதிபூண்ட பட்டதாரிகளுக்கு, முக்கியத்துவம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.

