/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார் முதல்வராவார் வெங்கடேஷ குருஜி ஆரூடம்
/
சிவகுமார் முதல்வராவார் வெங்கடேஷ குருஜி ஆரூடம்
ADDED : நவ 05, 2025 12:42 AM

பெங்களூரு: “துணை முதல்வர் சிவகுமாருக்கு, ராஜலட்சுமி யோகம் உள்ளது. அவர் முதல்வராவதை யாராலும் தடுக்க முடியாது,” என, சிக்கமகளூரு, கொப்பாவின் பக்குஞ்சி மடத்தின் வெங்கடேஷ குருஜி தெரிவித்தார்.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
துணை முதல்வர் சிவகுமாரின் ஜாதகத்தை ஆராய்ந்தேன். அவருக்கு ராஜலட்சுமி யோகம் உள்ளது. நவம்பர் 26க்கு பின், கர்நாடகாவில் அரசியல் மாற்றம் நிகழும். சிவகுமார் முதல்வராவார். இதை யாராலும் தடுக்க முடியாது.
ஒரு நாட்டின் மன்னருக்கு எப்படிப்பட்ட ராஜயோகம் இருக்குமோ, அதே ராஜயோகம் சிவகுமாரின் ஜாதகத்திலும் உள்ளது. 2031 வரை அவர் ராஜா போன்று ஆட்சி செய்வார்.
ஒன்றரை ஆண்டுக்கு முன்பே, அவரது ஜாதகத்தை ஆராய்ந்தேன். அவருக்கு மந்திராட்சதை கொடுத்தேன். அவருக்காகவே தினமும் துர்கா பாராயணம் செய்கிறேன். அவர் முதல்வராவது உறுதி.
ஆனால் அவருடன் இருப்பவர்களே, துரோகம் செய்தால் மட்டுமே, அவருக்கு பதவி கிடைப்பதில் சிறிது தாமதமாகும். இல்லையென்றால் அவர் பதவிக்கு வருவார். இவ்வாறு அவர் கூறினார்.

