/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தேன்கனிக்கோட்டை நபர் கழுத்தறுத்து கொலை
/
தேன்கனிக்கோட்டை நபர் கழுத்தறுத்து கொலை
ADDED : நவ 05, 2025 12:40 AM

பெங்களூரு: ஹெப்பகோடியில், தமிழகத்தை சேர்ந்தவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.
தமிழகத்தின், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பரந்துாரை சேர்ந்தவர் மா தேஷ், 40. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு, பெங்களூரு ஹெப்பகோடியின் காச்சநாயகனஹள்ளியில் குடியேறினார்.
மளிகைக் கடை நடத்தி வந்த அவர், சிகரெட் வினியோகஸ்தராகவும் இருந்தார். கிராமத்தில் இருந்த தனக்கு சொந்தமான நிலத்தை விற்று விட்டு, பெங்களூரில் வீடு கட்டி வந்தார்.
பக்கவாதம் ஏற்பட்டதால், அவ்வளவாக அவர் வெளியே வருவதில்லை. நேற்று மதியம் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, பைக்கில் வந்த மர்ம நபர், மாதேஷ் வீட்டுக்குள் நுழைந்து, அவரின் கழுத்தை அறுத்துவிட்டு தப்பினார். இதில், மாதேஷ் உயிரிழந்தார்.
இதை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர், மர்ம நபரை பிடிக்க முயற்சித்தார். அவரை கத்தியால் தாக்கி, உதைத்துவிட்டு மர்மநபர் தப்பினார். இதுதொடர்பாக, ஹெப்பகோடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவர்கள், ஏ.சி.பி., நாராயணனுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த அதிகாரிகள், சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.
வீட்டிற்குள் நுழைந்த மர்ம நபர், மாதேஷை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மட்டுமே வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். கொள்ளையடிக்க வந்திருந்தால், வீட்டில் இருந்த 2 லட்சம் ரூபாயை எடுத்துச் சென்றிருக்கலாம். ஆனால், பணம் அப்படியே தான் உள்ளது.
சம்பவ இடத்தில் மெட்டல் டிடெக்டர், ஏர் கன் உட்பட சில பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன. கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். கொலையாளியை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள் ளன.

