sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ குளிர்பானத்தில் விஷத்தன்மை ஆய்வுக்கு அமைச்சர் உத்தரவு

 குளிர்பானத்தில் விஷத்தன்மை ஆய்வுக்கு அமைச்சர் உத்தரவு

 குளிர்பானத்தில் விஷத்தன்மை ஆய்வுக்கு அமைச்சர் உத்தரவு


ADDED : மார் 07, 2026 06:15 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 07, 2026 06:15 AM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: பழரசம் போன்ற, 'பஸ் பல்ஸ்' என்ற குளிர்பானத்தில், விஷத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதன் மாதிரியை சேகரித்து, தரத்தை ஆய்வு செய்யும்படி சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் கூறியதாவது:

கடைகளில் விற்கப்படும், சிறார்கள் விரும்பி அருந்தும், 'பஸ் பல்ஸ்' என்ற குளிர்பானத்தில், விஷத்தன்மை இருப்பது கண்டுபிடி க்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தானாகவே முன் வந்து புகார் பதிவு செய்துள்ளது.

குளிர்பானத்தில் அபாயமான நச்சுக்கள் இருப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்கும்படி கோரி, மருந்துகள் கட்டுப்பாட்டு துறைக்கும் கடிதம் எழுதியுள்ளது.

இதை அருந்துவதால், குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.

டின்களில் விற்கப்படும், பஸ் பல்ஸ் குளிர்பானத்தில் சர்க்கரை அதிகமாக உள்ளது. 15 சதவீதம் ஆல்கஹால் அம்சம் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இதை சுகாதாரத்துறையும் தீவிரமாக கருதியுள்ளது.

குளிர்பான மாதிரியை சேகரித்து, தரத்தை பரிசோதிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அறிக்கை அடிப்படையில், அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us