/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குத்துச்சண்டையில் வெண்கலம் உடுப்பி வீராங்கனைக்கு அமைச்சர் பாராட்டு
/
குத்துச்சண்டையில் வெண்கலம் உடுப்பி வீராங்கனைக்கு அமைச்சர் பாராட்டு
குத்துச்சண்டையில் வெண்கலம் உடுப்பி வீராங்கனைக்கு அமைச்சர் பாராட்டு
குத்துச்சண்டையில் வெண்கலம் உடுப்பி வீராங்கனைக்கு அமைச்சர் பாராட்டு
ADDED : ஆக 14, 2025 11:21 PM

உடுப்பி: குத்துச்சண்டையில் வெண்கல பதக்கம் வென்ற உடுப்பி வீராங்கனைக்கு, அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் பாராட்டு தெரிவித்து உள்ளார்.
உடுப்பியின், மால்பேயை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி ஜெகதீஷ் சுவர்ணா - மாலதி தம்பதியின் மகள் மான்சி, 17. தனியார் கல்லுாரியில் பி.யு., முதல் ஆண்டு படிக்கிறார். குத்துச்சண்டை வீராங்கனையாக உள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் நடைபெற்று வரும், தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்றார். நேற்று முன்தினம் நடந்த போட்டியில் தனது எதிராளியை வீழ்த்தி மான்சி வெண்கல பதக்கம் வென்று உள்ளார்.
மான்சியின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு, கர்நாடக பெண்கள் நல அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
'கடலோர மாவட்டங்களில் குத்துச்சண்டை விளையாடுவது அரிதானது. ஆனாலும் இப்பகுதியில் இருந்து மீன்பிடி தொழிலாளியின் மகள், குத்துச்சண்டை விளையாட்டில் வெண்கலம் வென்று இருப்பது நமக்கு பெருமை அளிக்கும் விஷயம்.
'கடலோர மாவட்டங்களில் குத்துச்சண்டை விளையாட்டு அதிகரிக்கட்டும். இப்பகுதி குழந்தைகள் அனைத்து விளையாட்டிலும் பிரகாசிக்கட்டும். வரும் நாட்களில் தேசிய, சர்வதேச போட்டிகளில் பங்கேற்று அதிக பதக்கங்களை வென்று, மாநிலத்திற்கு பெருமை சேர்க்க மான்சிக்கு எனது வாழ்த்துக்கள். அவரது சாதனைகளுக்கு காங்கிரஸ் அரசு எப்போதும் முதுகெலும்பாக இருக்கும்' என்றும், லட்சுமி ஹெப்பால்கர் பதிவிட்டு உள்ளார்.