/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., மீது அமைச்சர் ராஜண்ணா மகன் 'பகீர்'
/
சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., மீது அமைச்சர் ராஜண்ணா மகன் 'பகீர்'
சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., மீது அமைச்சர் ராஜண்ணா மகன் 'பகீர்'
சிவகுமார் ஆதரவு எம்.எல்.ஏ., மீது அமைச்சர் ராஜண்ணா மகன் 'பகீர்'
ADDED : மார் 24, 2025 04:59 AM

துமகூரு: ''ஹேமாவதி கால்வாய் தண்ணீர் விஷயத்தில், துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவு எம்.எல்.ஏ., ரங்கநாத், எங்களை மிரட்டினார்,'' என்று, அமைச்சர் ராஜண்ணாவின் மகன் ராஜேந்திரா 'பகீர்' தகவல் கூறி உள்ளார்.
ஹாசன் ஹேமாவதி அணையில் இருந்து, கால்வாய் மூலம் துமகூரு மாவட்டத்தின் குப்பி, கொரட்டகெரே, மதுகிரிக்கு தண்ணீர் செல்கிறது. ஹேமாவதி அணை நீரை, ராம்நகரின் மாகடி, குனிகல்லுக்கு திருப்பி விடவும் நீர்பாசன துறையை தன் வசம் வைத்துள்ள, துணை முதல்வர் சிவகுமார் முயற்சி செய்து வந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் அமைச்சர் ராஜண்ணா மகனான, காங்கிரஸ் எம்.எல்.சி., ராஜேந்திரா நேற்று முன்தினம் இரவு, மதுகிரியில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது:
குனிகல்லுக்கு, ஹேமாவதி கால்வாய் தண்ணீர் செல்ல கூடாது என்று நாங்கள் கூறியதால், குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத், என் தந்தைக்கும், எனக்கும் மொபைல் போனில் மிரட்டல் விடுத்தார். நீர்பாசன அமைச்சர், தங்களுக்கு ஆதரவாக உள்ளார் என்பதால், என்ன வேண்டும் என்றாலும் பேசலாம் என்று நினைப்பது சரியில்லை.
எங்களுக்கே குறைந்த தண்ணீர் தான் கிடைக்கிறது. குனிகல்லுக்கு தண்ணீர் எடுத்து செல்ல வேண்டாம் என்று, நாங்கள் ஒருபோதும் கூறவில்லை. நீங்கள் எடுத்து செல்லுங்கள். ஆனால் குப்பி, கொரட்டகெரே, மதுகிரி தாலுகா மக்கள், விவசாயிகளை நினைத்து பார்க்க வேண்டும். எங்களுக்கு ஏன் தொந்தரவு தருகிறீர்கள்.
துமகூரு மாவட்டத்தில் குனிகல் தொகுதி மட்டும் தான் உள்ளதா; மற்ற தொகுதிகளே இல்லையா.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிலையில், நேற்று அவர் அளித்த பேட்டியில், ''மொபைல் போனில் பேசும் போது, 'ஹலோ' என்று சொன்னால், ஹலோ என்று தான் சொல்வர். துணை முதல்வர் சிவகுமாரிடம், யாராவது போனில் பேசினால் அவர் என்ன சொல்வார் என்று தெரியவில்லை. அவர் மூத்தவர். அவரை பற்றி நான் ஏதாவது பேசினால் தவறாகி விடும்,'' என்றார்.