/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'ஹனி டிராப்'பால் தர்மசங்கடம் அமைச்சர் சந்தோஷ் லாட் கருத்து
/
'ஹனி டிராப்'பால் தர்மசங்கடம் அமைச்சர் சந்தோஷ் லாட் கருத்து
'ஹனி டிராப்'பால் தர்மசங்கடம் அமைச்சர் சந்தோஷ் லாட் கருத்து
'ஹனி டிராப்'பால் தர்மசங்கடம் அமைச்சர் சந்தோஷ் லாட் கருத்து
ADDED : மார் 24, 2025 05:01 AM
ஹூப்பள்ளி: ''ஹனி டிராப் விஷயம் எங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது,'' என தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்தார்.
ஹூப்பள்ளியில் நேற்று அவர் அளித்த பேட்டி:
உலகின் பலநாடுகள், ஏதேதோ சாதனைகள் பற்றி பேசுகின்றன. ஆனால் நாம் இத்தகைய வெட்கக்கேடான விஷயத்துக்கு அடித்து கொள்கிறோம். ஹனிடிராப் விஷயத்தால் எங்களுக்கும் தர்மசங்கடம் ஏற்பட்டு உள்ளது.
பா.ஜ.,வின் 18 எம்.எல்.ஏ.,க்கள், மக்களுக்காக போராட்டம் நடத்தி, சட்டசபையில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படவில்லை. ஹனிடிராப் விஷயத்தில் தேவையின்றி குழப்பத்தை ஏற்படுத்தி, சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். ஹனிடிராப் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்துவதாக முதல்வர், உள்துறை அமைச்சர் கூறிய பின்னரும், பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டிய அவசியம் என்ன.
தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளன. எந்த விதிமுறையின் படி லோக்சபா தொகுதிகளை மறு சீராய்வு செய்கின்றனர் என்ற ஆதங்கம், கட்சி பாகுபாடின்றி அனைவருக்கும் உள்ளது. இது குறித்து அரசியல் கட்சிகள் சேர்ந்து ஆலோசிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.