/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகாவில் மூன்று மருத்துவ கல்லுாரிகள் அமைச்சர் சரணபிரகாஷ் தகவல்
/
கர்நாடகாவில் மூன்று மருத்துவ கல்லுாரிகள் அமைச்சர் சரணபிரகாஷ் தகவல்
கர்நாடகாவில் மூன்று மருத்துவ கல்லுாரிகள் அமைச்சர் சரணபிரகாஷ் தகவல்
கர்நாடகாவில் மூன்று மருத்துவ கல்லுாரிகள் அமைச்சர் சரணபிரகாஷ் தகவல்
ADDED : பிப் 10, 2026 04:10 AM
யாத்கிர்: ''கர்நாடகாவில் கூடுதலாக, 600 எம்.பி.பி.எஸ்., சீட்கள் அதிகரிக்கப்படும்,'' என மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண பிரகாஷ் பாட்டீல் தெரிவித்தார்.
யாத்கிரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ராம்நகர், பாகல்கோட், கனகபுரா ஆகிய மூன்று இடங்களில் புதிதாக அரசு மருத்துவ கல்லுாரிகள் கட்டப்பட வேண்டும். மாநிலத்தில், 600 எம்.பி.பி.எஸ்., சீட்கள் அதிகரிக்க வேண்டும் என, அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளோம். இத்திட்டங்கள் பட்ஜெட்டில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறோம்.
ஹூப்பள்ளியில் புதிதாக கட்டப்படும், 400 படுக்கைகள் கொண்ட ஜெயதேவா மருத்துவமனை, நடப்பாண்டு ஆகஸ்டில் திறந்து வைக்கப்படும்.
அடுத்த ஐந்து ஆண்டுகளில், ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு மருத்துவ கல்லுாரிகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, அவசர சிகிச்சை பிரிவு மற்றும் புற்றுநோய் மருத்துவமனைகள் கட்ட இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.