/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புதிதாக ஹெலிகாப்டர் வாங்கிய அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி
/
புதிதாக ஹெலிகாப்டர் வாங்கிய அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி
புதிதாக ஹெலிகாப்டர் வாங்கிய அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி
புதிதாக ஹெலிகாப்டர் வாங்கிய அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி
ADDED : செப் 20, 2025 11:09 PM

பெங்களூரு: பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, புதிதாக ஹெலிகாப்டர் வாங்கியது, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, சொந்தமாக ஹெலிகாப்டர் வைத்துள்ளார். இவரிடம் சிங்கிள் இன்ஜின் உள்ள ஹெலிகாப்டர் இருந்தது.
இதை விற்று விட்டு, ஜெர்மனியின், அகஸ்டா நிறுவனத்தின் அதி நவீன டபுள் இன்ஜின் ஹெலிகாப்டரை வாங்கியுள்ளார். இதன் விலை 20 கோடி ரூபாய்.
பெங்களூரு அருகில் உள்ள ஜக்கூர் விமான நிலையத்தில் தன் புதிய ஹெலிகாப்டரை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, நேற்று பார்வையிட்டார்.
கட்சி பணிகளுக் காகவும், அடுத்த சட்டசபை தேர்தலுக்கு தயாராகும் நோக்கிலும், இந்த ஹெலிகாப்டரை அவர் வாங்கியதாக கூறப்படுகிறது.
சதீஷ் ஜார்கிஹோளி வாங்கிய ஹெலிகாப்டரில், ஐந்து பயணியர், இரண்டு பைலட்டுகள் அமரும் திறன் கொண்டது. மேம்படுத்தப்பட்ட ஒயர்லெஸ் தொடர்பு வசதியும் உள்ளது.