/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்வார் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நம்பிக்கை
/
சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்வார் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நம்பிக்கை
சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்வார் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நம்பிக்கை
சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்வார் அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி நம்பிக்கை
ADDED : டிச 30, 2025 06:51 AM

யாத்கிர்: ''மாநிலத்தில் முதல்வர் மாற்றம் குறித்து, எந்த தகவலும் தெரியாது. பொங்கல் பண்டிகை முடிந்த பின், இதுபற்றி பேசலாம்,'' என பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி தெரிவித்தார்.
யாத்கிரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தற்போது சித்தராமையா முதல்வர் பதவியில் இருக்கிறார். எனவே அவரே பட்ஜெட் தாக்கல் செய்வார் என, நம்பிக்கை உள்ளது. முதல்வரை மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்படவில்லை. பொங்கல் பண்டிகை முடிந்த பின், இது குறித்து பேசலாம்.
முதல்வர் பதவி என்பது, சாலையில் கிடைக்கும் பொருள் அல்ல. அதற்கென்றே தனி நடைமுறை உள்ளது. நான் முதல்வர் பதவியை எதிர்பார்க்கவில்லை. கோகிலு லே - அவுட்டில், இடத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியவர்கள் யார் என்பதை, ஆய்வு செய்ய வேண்டும் என, துணை முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
இது பற்றி விசாரணை நடத்த மாநகராட்சி உள்ளது. மனித நேயம் அடிப்படையில் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.
மஹாராஷ்டிரா போலீசார், பெங்களூருக்கு வந்து போதை பொருட்கள் விற்ற குற்றவாளிகளை கைது செய்துள்ளனர். இது தொடர்பாக, அவர்கள் எங்கள் அரசுடன், என்ன தகவல்களை பகிர்ந்து கொள்கின்றனர் என்பதை, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். இது காங்கிரஸ் அரசின் தோல்வி என, பா.ஜ.,வினர் குற்றம்சாட்டுவது சரியல்ல.
எந்த அரசாக இருந்தாலும், அதற்கு போதை பொருள் முதல் எதிரி.
இவ்வாறு அவர் கூறினார்.

