/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிப்பு கேரள முதல்வர் பினராயி தலையீடு ஏன்?
/
கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிப்பு கேரள முதல்வர் பினராயி தலையீடு ஏன்?
கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிப்பு கேரள முதல்வர் பினராயி தலையீடு ஏன்?
கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிப்பு கேரள முதல்வர் பினராயி தலையீடு ஏன்?
ADDED : டிச 30, 2025 06:52 AM

எலஹங்கா: ''கோகிலு லே - அவுட்டில் வீடுகள் இடிக்கப்பட்ட விவகாரத்தில், தகுதியானவர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்படும். கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் ஒரு சமூகத்தினர் ஓட்டுகளை கவர, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆர்வம் காட்டுகிறார்,'' என, முதல்வர் சித்தராமையா கூறி உள்ளார்.
பெங்களூரு எலஹங்கா கோகிலு லே - அவுட்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த வீடுகள், கடந்த 20ம் தேதி இடிக்கப்பட்டன.
இங்கு வசித்தோருக்கு, மாற்று ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக, பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் அதிகாரிகளுடன், சித்தராமையா நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின், அவர் அளித்த பேட்டி:
கோகிலு லே - அவுட்டில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட 167 வீடுகள் இடிக்கப்பட்டு உள்ளன. அரசு நிலத்தை ஆக்கிரமிப்பது சட்டவிரோதம். ஆனாலும் அந்த வீடுகளில் வசித்தோருக்கு மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடுகளை செய்து கொடுக்க அரசு தயாராக உள்ளது.
கர்நாடக வீட்டு வசதி துறை சார்பில் பையப்பனஹள்ளியில் பல அடுக்கு கொண்ட 1,187 வீடுகள் கட்டப்பட்டு உள்ளன. கலெக்டர், ஜி.பி.ஏ., அதிகாரிகள் கொடுக்கும் பட்டியல் அடிப்படையில், தகுதியானவர்களுக்கு வீடு வழங்கப்படும்.
கோகிலு லே - அவுட்டில் இருந்து பையப்பனஹள்ளி 7 கி.மீ., துாரத்தில் உள்ளது. ஒவ்வொரு வீட்டையும் தலா 11.20 லட்சம் ரூபாய் செலவு செய்து கட்டி உள்ளோம். புத்தாண்டு அன்று வீடு வழங்க, அமைச்சர் ஜமீர் அகமது கான் ஒப்பு கொண்டார்.
கேரளாவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளதால் ஒரு சமூகத்தினர் ஓட்டுகளை கவர, கோகிலு லே - அவுட் மீது கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆர்வம் காட்டுகிறார். மனிதாபிமான அடிப்படையில் மாற்று ஏற்பாடு செய்து உள்ளோம்.
தாசில்தாருக்கு தெரியாமல் ஆக்கிரமிப்பு நடப்பது சாத்தியமில்லை. தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
துணை முதல்வர் சிவகுமார் கூறுகையில், ''முதல்வர் உத்தரவின்படி இன்று (நேற்று) கோகிலு லே - அவுட் சென்று மக்களை சந்தித்தேன். தகுதியானவர்களுக்கு நிச்சயம் வீடு கிடைக்கும். அதுவரை அவர்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்.
ஆக்கிரமிப்புகளுக்கு எங்கள் ஆதரவு எப்போதும் இல்லை. சில அதிகாரிகள் பணம் வாங்கி கொண்டு, வீடு கட்ட அனுமதி கொடுத்தது தெரிந்து உள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

