மாநில காங்., தலைவர் பதவி மீது அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி 'குறி'
மாநில காங்., தலைவர் பதவி மீது அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி 'குறி'
ADDED : மே 28, 2026 03:18 AM

பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவி மீது, அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கண் வைத்து உள்ளார்.
கர்நாடக முதல்வர் பதவியை சித்தராமையா ராஜினாமா செய்த பின், துணை முதல்வராக இருக்கும் சிவகுமார் முதல்வராவார். அதன் பின், கர்நாடக காங்கிரஸ் தலைவர் பதவியை, சிவகுமார் ராஜினாமா செய்வார் என நம்பப்படுகிறது.
அப்போது, மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை தனக் கு வழங்க வேண்டும் என அமைச்சர் சதிஷ் ஜார்கிஹோளி விரும்புகிறாார்.
எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, இதற்காக, கட்சியின் மேலிட தலைவர்களிடம் பேச்சு நடத்தவும் ஆரம்பித்து உள்ளார்.
இதுகுறித்து டில்லியில் நேற்று அவர் கூறுகையில், ''கட்சி மேலிட தலைவர்களிடம், சித்தராமையா என்ன பேசினார் என்று, எங்கள் யாருக்கும் தெரியாது. அவரே வெளிப்படையாக சொன்னால் தான் உண்டு.
' 'முதலில் முதல்வர் பதவி குழப்பத்திற்கு தீர்வு கிடைக்கட்டும். பின், மற்ற விஷயங்களை பற்றி பேசி கொள்ளலாம். கட்சி மேலிடம் என்னை அழைத்து கருத்து கேட்டால், எனது விருப்பங்களை கூற தயாராக உள்ளேன்,'' என்றார்.
இதன் மூலம் தலைவர் பதவி மீது கண் வைத்து இருப்பதை, சதீஷ் ஜார்கிஹோளி சூசகமாக வெளிப்படுத்தி உள்ளார்.
