தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சித்துவின் தலைமையில் அடுத்த தேர்தல் சொல்கிறார் அமைச்சர் சதீஷ்

 சித்துவின் தலைமையில் அடுத்த தேர்தல் சொல்கிறார் அமைச்சர் சதீஷ்

 சித்துவின் தலைமையில் அடுத்த தேர்தல் சொல்கிறார் அமைச்சர் சதீஷ்


ADDED : ஜூலை 14, 2026 09:30 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 09:30 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெலகாவி: ''சித்தராமையாவின் தலைமையிலேயே அடுத்த சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும்,'' என, பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி கூறி உள்ளார்.

இது குறித்து, அவர் கூறியதாவது:

முன்னாள் முதல்வர் சித்தராமையாவை புறக்கணிக்கும் கேள்விக்கே இடமில்லை. அவரது தலைமையின் கீழ் அடுத்த சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும்.

அஹிந்தாவின் தலைமை பொறுப்பை அடுத்ததாக யார் ஏற்பார் என்பது குறித்து விவாதிக்க தேவையில்லை.இதை பற்றி தற்போது பேச வேண்டிய அவசியமுமில்லை.

பெலகாவியை சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்கள், அமைச்சர்களாக மாற்றப்பட வேண்டும் என்பது என் தனிப்பட்ட விருப்பம். இவ்விஷயத்தில், கட்சி மேலிடமே இறுதி முடிவு எடுக்கும்.

அமைச்சரவை விரிவாக்கம் எப்போது நடக்கும்; பி.கே.ஹரிபிரசாத்துக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்பது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

மாநிலம் முழுதும் எஸ்.ஐ.ஆர்., பணிகள் ஒழுங்காக நடக்கின்றன. எஸ்.ஐ.ஆர்., பணிகளில் முறைகேடு நடந்தால், தேர்தல் ஆணையத்தில் தாராளமாக புகார் அளிக்கலாம்.

அயோத்தி ராமர் கோவில் நன்கொடை திருட்டு வழக்கில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பெலகாவியில் அதிகமாக மழை பெய்கிறது.

இதனால், பல இடங்களில் பயிர்கள் நாசமடைந்து உள்ளன. விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு செய்யும்.

பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்த, பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us