தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஹரிபிரசாத்துக்கு அமைச்சர் பதவி? மேலிடத்தில் சித்தராமையா முயற்சி

 ஹரிபிரசாத்துக்கு அமைச்சர் பதவி? மேலிடத்தில் சித்தராமையா முயற்சி

 ஹரிபிரசாத்துக்கு அமைச்சர் பதவி? மேலிடத்தில் சித்தராமையா முயற்சி


ADDED : ஜூலை 14, 2026 09:29 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 14, 2026 09:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு: காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத்துக்கு, மாநிலத்தில், அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க, கட்சி மேலிடத்திடம், முன்னாள் முதல்வர் சித்தராமையா முயற்சி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடகாவின் முதல்வராக கடந்த மாதம் 3ம் தேதி சிவகுமார் பதவியேற்றார். துணை முதல்வராக பரமேஸ்வரும், 13 அமைச்சர்களும் பதவியேற்றனர். அமைச்சரவையில், 20 இடங்கள் காலியாக இருக்கும் நிலையில், கடந்த மாத இறுதியிலேயே அமைச்சரவை விரிவாக்கம் நடக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், தற்போது வரை நடக்கவில்லை. கட்சியின் மூத்த தலைவர் ராகுல் வெளிநாடு சென்றுள்ளதால், அமைச்சரவை விரிவாக்கத்தில் தாமதம் என்று கூறப்பட்டாலும், மூத்த எம்.எல்.ஏ.,க்கள் பலர் அமைச்சர் பதவி கேட்டு அழுத்தம் கொடுப்பதால், யாருக்கு பதவி வழங்குவது என, சிவகுமார் குழப்பத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது.

எம்.எல்.ஏ.,க்கள் ஒரு பக்கம் அழுத்தம் கொடுக்கும் நிலையில், எம்.எல்.சி.,க்கள் சிலரும் அமைச்சர் பதவி கேட்டு போர்க்கொடி துாக்கி உள்ளனர். முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் ஆதரவை பெற முயற்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ஹரிபிரசாத்துக்கு, மாநில அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க சித்தராமையா நினைக்கிறார். கட்சி மேலிடத்திடம் பேசவும் அவர் தயாராக உள்ளார்.

ஆனால், சிவகுமாருக்கும், ஹரிபிரசாத்துக்கும் ஆகவே ஆகாது. சிவகுமார் அமைச்சரவையில் ஹரிபிரசாத்தை இடம்பெற செய்து, சிவகுமாருக்கு குடைச்சல் கொடுக்க வைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஒரு காலத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, சித்தராமையாவின் தீவிர ஆதரவாளராக இருந்தார். அவருக்கு கட்சி தலைவர், அமைச்சர் பதவி வாங்கி கொடுக்க சித்தராமையா நினைத்தார்.

தற்போது அவர்கள் உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், ஹரிபிரசாத்தை அமைச்சராக்கி, சதீஷ் ஜார்கிஹோளிக்கு நெத்தியடி கொடுக்கவும், சித்தராமையா முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us