ஹாசனாம்பா கோவிலில் லட்டு விலை உயர்த்திய அதிகாரிகளை கண்டித்த அமைச்சர்
ஹாசனாம்பா கோவிலில் லட்டு விலை உயர்த்திய அதிகாரிகளை கண்டித்த அமைச்சர்
UPDATED : அக் 31, 2026 05:42 AM
ADDED : அக் 30, 2026 06:46 PM

ஹாசன்: ஹாசனாம்பா கோவிலில், பிரசாத லட்டு விலையை, 100 ரூபாயாக உயர்த்திய, மாவட்ட நிர்வாகத்தின் முடிவை, அமைச்சர் சிவலிங்கேகவுடா கண்டித்தார். 60 ரூபாய்க்கு இரண்டு லட்டுகள் வினியோகிக்கும்படி உத்தரவிட்டார்.
ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே, தரிசனம் தரும் ஹாசனாம்பா கோவில் திறக்கப்பட்டதால், பெருமளவில் பக்தர்கள் திரண்டு வருகின்றனர்.
கர்நாடகா மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும், இந்த கோயிலுக்கு பக்தர்கள் வருகின்றனர். கோவிலின் வருவாயை உயர்த்தும் நோக்கில், லட்டு பிரசாதம் விலையை உயர்த்த, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
ஹாசனாம்பா கோவிலுக்கு, லட்டு பிரசாதம் தயாரித்து வினியோகிக்க, இஸ்கான் நிறுவனம் டெண்டர் பெற்றுள்ளது. இரண்டு லட்டுகளுக்கு 57 ரூபாய் நிர்ணயித்துள்ளது. இதற்கு அதிகாரிகளும் ஒப்புதல் அளித்துள்ளனர். ஆனால், 57 ரூபாய்க்கு வாங்கி, அதை பக்தர்களுக்கு 100 ரூபாய்க்கு விற்க, அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
இதையறிந்த மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவலிங்கே கவுடா, அதிகாரிகளை கண்டித்தார்.
''கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு, குறைந்த விலையில் பிரசாதம் வினியோகிக்க வேண்டும். பிரசாதம் விற்று கோவிலின் வருவாயை அதிகரிக்க வேண்டிய அவசியம் இல்லை. 60 ரூபாய்க்கு இரண்டு லட்டுகள் வினியோகியுங்கள். நானே அரசு. என் முடிவே இறுதியானது. லட்டு விலையை உயர்த்தும் எண்ணத்தை கைவிடுங்கள்,'' என, உத்தரவிட்டார்.
